செய்திகள் மலேசியா
ஜொகூர், நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களில் பெர்சமா கட்சி போட்டியிடும்: ரபிசி
கோலாலம்பூர்:
ஜொகூர், நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களில் பெர்சமா கட்சி போட்டியிடும்.
அக்கட்சியின் தலைவர் ரபிசி ரம்லி இதனை உறுதிப்படுத்தினார்.
பாண்டன் இந்தா சந்தையில் பொதுமக்கள் புகார்கள், கட்சி உறுப்பினர் பதிவு மையத்தை அமைத்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரபிசி,
கட்சியின் தேர்வு செயல்முறையின் ஒரு பகுதியாக, வரும் திங்கட்கிழமை முதல் வருங்கால வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்களை ஏற்கத் தொடங்கும்.
ஜொகூரில் உள்ளூர் தலைவர்களுடன் பெர்சமா கட்சி பேச்சுவார்த்தைகளை முடித்துவிட்டது.
நெக்ரி செம்பிலானில் அடுத்த வாரம் கலந்துரையாடல்கள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
அடிப்படையில், எங்களின் ஆரம்ப இலக்கு தொகுதிகளின் பட்டியலை, உள்ளூர் நிலைமை குறித்த அவர்களின் கருத்துக்கள், மதிப்பீடுகளுடன் நாங்கள் பொருத்தி வருகிறோம்.
வேட்புமனு தாக்கல் நாளுக்கு நெருங்கிய நாட்களில், ஜொகூர், நெக்ரி செம்பிலானில் போட்டியிடத் திட்டமிட்டுள்ள தொகுதிகளை கட்சி அறிவிக்கும்.
மூன்று வாரங்கள் மட்டுமே ஆன கட்சிக்கு, தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தயார் செய்ய போதுமான நேரம் இருக்குமா என்று கேட்டபோது, திங்கட்கிழமை விண்ணப்பங்கள் திறக்கப்படும் என்றும், அனைத்து விண்ணப்பதாரர்களும் நேர்காணல்கள், மதிப்பீடுகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் ரபிசி கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 25, 2026, 12:44 pm
திரெங்கானு மாநில ஆட்சியாளர் சுல்தான் மிஸான் நலமுடன் உள்ளார்: திரெங்கானு அரண்மனை தகவல்
July 25, 2026, 12:43 pm
கோலா லங்காட்டில் துணி சுற்றப்பட்ட நிலையில் குழந்தையின் சடலம் மீட்பு: மாணவி கைது
July 25, 2026, 12:30 pm
