நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நெகிரி செம்பிலானில் தேசிய முன்னணி ஆட்சியமைத்தால் இரு இந்தியர்கள் ஆட்சிக் குழுவில் இடம் பெறுவார்கள்: ஜாஹித்

போர்ட்டிக்சன்:
நெகிரி செம்பிலானில் தேசிய முன்னணி ஆட்சியமைத்தால் இரு இந்தியர்கள் ஆட்சிக் குழுவில் இடம் பெறுவார்கள்.

இது எனது வாக்குறுதி என்று தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி கூறினார்.

நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்த தேர்தலில் தேசிய முன்னணி 25 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடுகிறது.

இதில் மஇகா ஸ்ரீ தஞ்சோங், சிரம்பான் ஜெயா ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறது.

மேலும் இந்த மாநிலத்தில் இந்திய வாக்காளர்களின் எண்ணிக்கை விகிதம் மிக அதிகமாக உள்ளது.

இதன் அடிப்படையில் தேசிய முன்னணி இந்த தேர்தலில் வெற்றி பெற்று நெகிரியில் ஆட்சி அமைத்தால் இரு இந்தியர்கள் ஆட்சி குழுவில் இடம் பெறுவார்கள்.

அவர்கள் மஇகாவை சேர்ந்த இருவராகவே இருப்பார்கள். இது என்னுடைய தேர்தல் வாக்குறுதி அல்ல.

மாறாக தேசிய முன்னணி மீது நம்பிக்கை கொண்டு வாக்களிக்கும் இந்திய வாக்காளர்களுக்கான ஒரு நன்றி கடன் ஆகும்.

ஆகவே நெகிரி செம்பிலான் மாநில இந்தியர்கள் மஇகா வேட்பாளர்களை தவிர்த்து தேசிய முன்னணி, அதன் நட்பு கூட்டணிகளின் வேட்பாளர்களையும் வெற்றி பெற செய்ய வேண்டும்.

இதுவே எனது வேண்டுகோள் ஆகும் என்று ஸ்ரீ தஞ்சோங் இந்தியர்களுடனான சந்திப்புக் கூட்டத்தில் டத்தோஸ்ரீ ஜாஹித் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset