செய்திகள் மலேசியா
நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் இனம், மதம் சார்ந்த பிரச்சினைகளைக் கொண்டு விளையாட வேண்டாம்; சனுசி இங்கு வர வேண்டாம்: ஜாஹித்
சிரம்பான்:
நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் இனம், மதம் சார்ந்த பிரச்சினைகளைக் கொண்டு விளையாட வேண்டாம்.
குறிப்பாக கெடா மந்திரி புசார் டத்தோஸ்ரீ சனுசி இங்கு வர வேண்டாம் என்று தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி இவ்வாறு அறிவுறுத்தினார்.
இந்த முறை நடைபெறவிருக்கும் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலுக்கான பிரச்சாரக் காலம் முழுவதும் இனம், மதம் தொடர்பான பிரச்சினைகளைக் கொண்டு விளையாட வேண்டாம்.
மக்களிடையே ஒற்றுமையைக் காட்டுவதே முஹம்மது சனூசியின் நோக்கமாக இருந்தால், இதுபோன்ற விஷயங்களை எழுப்பத் தேவையில்லை.
ஏனெனில் அது சமூகத்தில் உள்ள பல்வேறு தரப்பினரை அதிருப்திக்கு உள்ளாக்கும்.
மக்களிடையே ஒற்றுமையைக் காட்டுவதே அவரது நோக்கமாக இருந்தால், இனம், மதம், கலாச்சாரம், இந்த நாட்டில் உள்ள பிற இனங்களின் பின்னணிகள் குறித்துப் பேசத் தேவையில்லை.
நம் நாட்டில் உள்ள மக்களின் பன்மைத்தன்மை, அதாவது இந்தப் பின்னணி, ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட சுனத்துல்லாஹ் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
எனவே, இதுபோன்ற விஷயங்களைத் தொடத் தேவையில்லை.
அவர்கள் நண்பர்களாக இருக்க விரும்பினால், நீங்கள் விரும்பும் விதத்தில் நட்பாக இருங்கள், மற்ற விஷயங்களைத் தொடாதீர்கள்.
முடிந்தால் ஆகஸ்ட் 1 வரை அவர் கெடா மாநிலத்தை நிர்வகிப்பதில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வது நல்லது என்று நான் நினைக்கிறேன்.
நெகிரி செம்பிலானுக்கு வர வேண்டிய அவசியமில்லை. நெகிரி செம்பிலானை நமது வழியில் நிர்வகிப்போம் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 25, 2026, 12:44 pm
திரெங்கானு மாநில ஆட்சியாளர் சுல்தான் மிஸான் நலமுடன் உள்ளார்: திரெங்கானு அரண்மனை தகவல்
July 25, 2026, 12:43 pm
கோலா லங்காட்டில் துணி சுற்றப்பட்ட நிலையில் குழந்தையின் சடலம் மீட்பு: மாணவி கைது
July 25, 2026, 12:30 pm
