செய்திகள் மலேசியா
கோலா லங்காட்டில் துணி சுற்றப்பட்ட நிலையில் குழந்தையின் சடலம் மீட்பு: மாணவி கைது
கோலா லங்காட் -
கோலா லங்காட்டில் உள்ள உயர்க்கல்வி நிறுவனத்தின் தங்கும் விடுதி வளாகத்தில் துணியால் சுற்றப்பட்ட நிலையில் குழந்தையின் சடலம் ஒன்று மீட்கப்பட்டது
இந்நிலையில் சந்தேகத்தின் அடிப்படையில் பெண் மாணவி ஒருவர் போலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்
இதனை லங்காட் மாவட்ட போலிஸ் தலைவர் அக்மால்ரிசால் ரட்சி கூறினார்.
நேற்று நண்பகல் 12.20 மணியளவில் குழந்தையின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, குழந்தையின் தாயாக சந்தேகிக்கப்படும் இளம் வயது மாணவி கைது செய்யப்பட்டார்.
குற்றவியல் சட்டத்தின் செக்ஷன் 318இன் கீழ் இந்த சம்பவம் விசாரணை செய்யப்படுவதாக அவர் தெரிவித்தார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக இரண்டு ஆண்டு சிறை தண்டனை அலல்து அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 25, 2026, 12:44 pm
திரெங்கானு மாநில ஆட்சியாளர் சுல்தான் மிஸான் நலமுடன் உள்ளார்: திரெங்கானு அரண்மனை தகவல்
July 25, 2026, 12:30 pm
