நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியா மீது கூடுதலாக 10 விழுக்காடு அமெரிக்கா வரி விதிப்பு: நாட்டின் போட்டியற்றாலை பாதிக்க செய்யாது 

கோலாலம்பூர் -

மலேசியா மீது கூடுதலாக 10 விழுக்காடு வரியை விதித்தது அமெரிக்கா 

இந்த வரி விதிப்பினால் மலேசியாவின் போட்டியாற்றலைப் பாதிக்க செய்யாது என்று வர்த்தக, முதலீடு மற்றும் தொழிற்துறை அமைச்சர் ஹொஹாரி அப்துல் கானி கூறினார். 

காரணம், மலேசியா உட்பட அனைத்து நாடுகளுக்கும் அமெரிக்கா இந்த கூடுதல் வரி விதிப்பை செய்துள்ளதை அவர் மேற்கொள் காட்டினார். 

விகிதம் அதிகமாக இருந்தாலும் சரி, குறைவாக இருந்தாலும் சரி, எல்லா நாடுகளும் சுங்க வரிகளுக்கு உட்பட்டவை. மலேசியாவைப் பொறுத்தவரை, 10% விகிதம் மிகக் குறைவான விகிதங்களில் ஒன்றாகும்.

முன்னதாக கட்டாய உழைப்பு குற்றச்சாட்டின் பேரில் அமெரிக்கா மலேசியா மீது கூடுதலாக 10 விழுக்காடு வரியை விதித்தது 

10% சுங்க வரி விகிதத்திற்கு உட்பட்ட 17 பொருளாதாரங்களில் மலேசியாவும் ஒன்றாகும் என்றும், மற்ற பொருளாதாரங்கள் 12.5% ​​சுங்க வரிக்கு உட்பட்டிருந்தன என்றும் ஜொஹரி கூறினார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset