நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலாய் வாக்குகளைப் பெற ஏன் தவறிவிட்டோம் என்பதை நம்பிக்கை கூட்டணி தன்னைத் தானே கேட்டுக்கொள்ள வேண்டும்: கைரி

ரெம்பாவ்:

மற்ற கட்சிகளைக் குறை கூறுவதற்குப் பதிலாக, மலாய் வாக்காளர்களின் ஆதரவைப் பெற கூட்டணி ஏன் தவறிவிட்டது என்று நம்பிக்கை கூட்டணி தன்னைத் தானே கேட்டுக்கொள்ள வேண்டும்.

முன்னாள் ரெம்பாவ் நாடாளுமன்ற உறுப்பினர் கைரி ஜமாலுடின் அபு பாக்கார் இதனை கூறினார்.

மலாய் மக்களின் உணர்வுகளைக் கூட்டணி சரியாகக் கையாளத் தவறிவிட்டது.

ஆனால் அது அவர்களை ஒருவித சங்கடத்திற்கு உள்ளாக்கியுள்ளது என்று தான் முன்பே கூறியிருந்ததாகத் தெரிவித்தார்.

மலாய் மக்களின் உணர்வுகளை நம்பிக்கை கூட்டணி சரியாகக் கையாளவில்லை என்று நான் குறிப்பிட்டதால், நான் இனப் பிரச்சினையை பெரிதுபடுத்துவதாகக் கூறி அவர்கள் கோபமடைந்தனர்.

ஆனால், மலாய் வாக்காளர்களிடையே தங்களுக்கு ஏன் செல்வாக்கு இல்லை என்பது குறித்து நம்பிக்கை கூட்டணி கட்சிகள் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

லெங்கெங் மாநில சட்டமன்றத் தொகுதிக்கான தேசிய முன்னணி வேட்பாளர் டத்தோ முகமது அஸ்னா அமீனுடன் பிரச்சாரம் செய்த போது கைரி செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்


தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset