செய்திகள் மலேசியா
பள்ளி மாணவிகள் மரணத்தில் வேறு தரப்பினருக்குத் தொடர்பில்லை; பாதிக்கப்பட்டவர்கள் தாங்களாகவே பள்ளியை விட்டு வெளியேறினர்: போலிஸ்
ஈப்போ:
புந்தோங் அருகே உள்ள சுங்கை பாரி பிளாட்ஸ் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட 14 வயதுடைய இரண்டு மாணவிகளின் மரணத்தில், வேறு எந்தத் தரப்பினருக்கும் தொடர்பு இருந்ததற்கான ஆதாரம் இதுவரை இல்லை.
சம்பவம் நடப்பதற்கு முன்பு பாதிக்கப்பட்ட இருவரும் தாங்களாகவே பள்ளியை விட்டு வெளியேறியதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என பேரா மாநில போலிஸ் தலைவர் டத்தோ முகமது அல்வி ஜைனல் அபிடின் கூறினார்.
சம்பவ இடத்தில் இருவரும் சுயநினைவின்றி காணப்பட்டதாகவும், பின்னர் அவர்கள் இறந்துவிட்டதாக உறுதி செய்யப்பட்டதாகவும் போலிசாருக்கு தகவல் கிடைத்தது.
இதுவரை, இந்தச் சம்பவத்தில் வேறு எந்தத் தரப்பினருக்கும் தொடர்பு இருந்ததற்கான ஆதாரம் விசாரணையில் கிடைக்கவில்லை.
விசாரணைகள் இன்னும் நடைபெற்று வருவதாகவும், பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் தடயவியல் பகுப்பாய்வு கிடைத்த பின்னரே மரணத்திற்கான சரியான காரணம் கண்டறியப்படும் என்றும் முகமது அல்வி கூறினார்.
மேலும், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரின் தனியுரிமையை மதிக்குமாறும், விசாரணையில் தலையிடக்கூடிய சரிபார்க்கப்படாத தகவல்களை ஊகிக்கவோ அல்லது பரப்பவோ வேண்டாம் என்றும் அவர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்தச் சம்பவம் குறித்து தகவல் தெரிந்த பொதுமக்கள், விசாரணைக்கு உதவுவதற்காக ஈப்போ மாவட்ட போலிஸ் தலைமையகத்தின் செயல்பாட்டு அறையை 05-2451500 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு அல்லது அருகிலுள்ள எந்தவொரு காவல் நிலையத்திற்கும் வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 25, 2026, 12:44 pm
திரெங்கானு மாநில ஆட்சியாளர் சுல்தான் மிஸான் நலமுடன் உள்ளார்: திரெங்கானு அரண்மனை தகவல்
July 25, 2026, 12:43 pm
கோலா லங்காட்டில் துணி சுற்றப்பட்ட நிலையில் குழந்தையின் சடலம் மீட்பு: மாணவி கைது
July 25, 2026, 12:30 pm
