நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

திரெங்கானு மாநில ஆட்சியாளர் சுல்தான் மிஸான் நலமுடன் உள்ளார்: திரெங்கானு அரண்மனை தகவல் 

கோல திரெங்கானு: 

திரெங்கானு மாநில ஆட்சியாளர், மேன்மை தங்கிய சுல்தான் மிஸான் சைனால் அபிடின் அவர்கள் நலமுடன் உள்ளதாகவும் வெளிநாட்டில் தொடர் சிகிச்சையை மேற்கொள்வார் என்று திரெங்கானு மாநில அரண்மனை தெரிவித்துள்ளது 

தனது உடல்நலம் மீண்டு வர பிரார்த்தனை மேற்கொண்ட அனைத்து மக்களுக்கு சுல்தான் மிஸான் சைனால் அபிடின் பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்து கொள்வதாக அவரின் டத்தோ பெங்கெலோலா ஶ்ரீ பிஜாயா முஹம்மத் சோஃபியான் அபு பக்கார் கூறினார். 

"அல்லாஹ் சுபஹானஹு வதஆலா, மாட்சிமை பொருந்திய சுல்தான் அவர்களுக்கு நல்ல மற்றும் நீண்டகால ஆரோக்கியத்தை தொடர்ந்து வழங்கி, அவருடைய காரியங்கள் அனைத்தையும் எளிதாக்குவானாக," என்று அந்த அறிக்கை தெரிவித்தது.

சுல்தான் மிஸான் சைனால் அபிடின் அவர்கள் திரெங்கானு மாநில ஆட்சியாளராக உள்ளது. தற்போது அவர் வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வருகிறார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset