நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தாபோங் ஹாஜியை உட்படுத்திய அரச விசாரணை அறிக்கையை வெளியிட அமைச்சரவை இணக்கம் தெரிவிக்கும்: பிரதமர் அன்வார் நம்பிக்கை 

செபெராங் பிறை - 

தாபோங் ஹாஜியை உட்படுத்திய அரச விசாரணை அறிக்கையை பொதுவில் வெளியிட அமைச்சரவை இணக்கம் தெரிவிக்கும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நம்பிக்கை தெரிவித்தார். 

அந்த அறிக்கையை வெளியிடப்போவதாக அறிவித்திருந்த போதிலும் இதுவரை அது வெளியிடப்படாததற்கான காரணம் குறித்து தன்னை சில தரப்பினர் கேள்வி எழுப்பியதாகவும் அவர் கூறினார்.

எதிர்வரும் புதன்கிழமை அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் தாபோங் ஹஜி அரச விசாரணை அறிக்கையை வெளியிடலாமா இல்லையா குறித்து அமைச்சரவை உறுப்பினர்கள் இணக்கம் தெரிவிப்பார்கள். 

தாபோங் ஹாஜி மீதான பொதுமக்களின் நம்பிக்கை பாதிக்கப்படாமல் இருக்க  இருக்க வேண்டும் என்பதற்காகவே அறிக்கை உடனடியாக வெளியிடப்படவில்லை என்றார்.

முன்னதாக, தாபோங் ஹாஜியின் முக்கிய சொத்துகள் விற்பனை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக அரச விசாரணை ஆணையத்தின் முடிவுகளைப் பொதுமக்கள் அறிந்து கொள்ள பொதுவில் வெளியிட அரசாங்கம் தயாராக உள்ளது என்று பிரதமர் அன்வார் இதற்கு முன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset