செய்திகள் மலேசியா
நெகிரியில் 22 பாலர் பள்ளிகளுக்கு நிதி; பெற்றோரின் நிதி சுமையை குறைப்பதே மித்ராவின் செலேக் மடானி திட்டத்தின் முதன்மை இலக்கு: ரவீந்திரன் நாயர்
சிரம்பான்:
பெற்றோரின் நிதி சுமையை குறைப்பதே மித்ராவின் செலேக் மடானி திட்டத்தின் முதன்மை இலக்காகும்.
மித்ராவின் தலைமை இயக்குநர் ரவீந்திரன் நாயர் இதனை கூறினார்.
இந்திய சமுதாயத்தின் உருமாற்றத்திற்கு கல்வி முக்கிய பங்கை வகிக்கிறது.
இதன் அடிப்படையில் தான் கல்வி தொடர்பான திட்டங்களுக்கு மித்ரா முன்னுரிமை கொடுத்து வருகிறது.
குறிப்பாக செலேக் மடானி திட்டத்தின் கீழ் பாலர் பள்ளிகளுக்கு நிதிகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிதி நேரடியாக பாலர் பள்ளிகளுக்கு பயனளிக்காது.
மாறாக பெற்றோர்களின் நிதி சுமையை குறைப்பதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.
இத்திட்டத்தின் கீழ் பாலர் பள்ளிகளின் கட்டணங்களை குறைப்பதுடன் பிள்ளைகளுக்கு காலை உணவும் வழங்கப்படுகிறது.
பிள்ளைகளுக்கும் பெற்றோர்களுக்கும் பயனளிக்கும் இத்திட்டத்தை தொடர வேண்டும் என மனிதவள அமைச்சரும் மித்ரா தலைவருமான டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் வலியுறுத்தி வருகிறார்.
ஆக இத்திட்டம் வரும் காலங்களில் இன்னும் சிறப்பாக தொடரப்படும் என்று ரவீந்திரன் நாயர் கூறினார்.
முன்னதாக செலேக் மடானி திட்டத்திற்காக மித்ரா 8.87 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது.
இத்திட்டத்திற்கு மொத்தம் 179 விண்ணப்பம் பெறப்பட்டன. இதில் 162 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
கிட்டத்தட்ட 3,621 பாலர் பள்ளி மாணவர்கள் இத்திட்டத்தின் வாயிலாக பயனடைந்துள்ளனர்.
செலேக் மடானி திட்டத்தில் ஆக அதிகமாக சிலாங்கூர் மாநிலத்தில் 45 பாலர் பள்ளிக்கு நிதி வழங்கப்படவுள்ளது.
அதே வேளையில் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் 22 பாலர் பள்ளிகளுக்கு நிதி வழங்கப்படும்.
சிரம்பான் புடாயுகு செரியா பாலர் பள்ளி பெற்றோர்களுடனான சந்திப்புக் கூட்டத்திற்கு பின் ரவீந்திரன் நாயர் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 25, 2026, 12:44 pm
திரெங்கானு மாநில ஆட்சியாளர் சுல்தான் மிஸான் நலமுடன் உள்ளார்: திரெங்கானு அரண்மனை தகவல்
July 25, 2026, 12:43 pm
கோலா லங்காட்டில் துணி சுற்றப்பட்ட நிலையில் குழந்தையின் சடலம் மீட்பு: மாணவி கைது
July 25, 2026, 12:30 pm
