செய்திகள் மலேசியா
சனுசியின் பேச்சு நாட்டில் பதற்றத்தை உருவாக்கும்: ராம்கர்பால் கடுமையாகச் சாடினார்
கோலாலம்பூர்:
மலேசியாவில் உள்ள பல்வேறு இன மக்கள் வெளிநாடுகளில் உள்ள தங்கள் மூதாதையர் தாயகங்களைச் சார்ந்திருக்கலாம் என்று கூறியதன் மூலம் இன உணர்வுகளை அப்பட்டமாகப் புறக்கணித்த கெடா மந்திரி புசார் சனுசி நோரின் செயல்களை புக்கிட் கெலுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம்கர்பால் சிங் கடுமையாகச் சாடினார்.
மேலும் தேசியக் கூட்டணி தேர்தல் இயக்குநரைக் கண்டிக்க அம்னோ மறுத்துள்ளது.
இது நெகிரி செம்பிலானில் தொடங்கியுள்ள புதிய கூட்டணியைக் கருத்தில் கொண்டு, எதிர்காலத்தில் என்ன நடக்குமோ என்பது குறித்து ஆழ்ந்த கவலை நிலவுவதாகவும் அவர் கூறினார்.
சனுசி கூறியதைக் கண்டிக்க விரும்பாத அம்னோவின் மனப்பான்மையால் தேசிய முன்னணி தனித்துச் செயல்பட வேண்டும் என்ற மஇகச் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரனின் அழைப்பு, பாஸ் கட்சியால் தூண்டப்பட்ட சூழ்நிலையைச் சற்றும் தணிக்கவில்லை.
கடந்த வியாழக்கிழமையன்று கெடாவின் மந்திரி பெசாராகவும் இருக்கும் சனுசி, இந்தியா, சீனா அல்லது தாய்லாந்திற்குத் திரும்பக்கூடிய மற்ற இனக் மக்களை போலல்லாமல், மலாய்க்காரர்களின் ஒரே தாயகம் ‘தானா மெலாயு’ தான் என்று கூறினார்.
நெகிரி செம்பிலானில் பிரச்சாரத்தின் போது அவர் கூறிய இந்தக் கருத்து, உணர்வற்றது மட்டுமல்லாமல், நீண்ட காலமாக வளர்க்கப்பட்ட மரியாதை மற்றும் புரிதலை வெளிப்படையாகப் புறக்கணிப்பதாகவும் இருந்தது என்று ராம்கர்பால் கூறினார்.
ஏனெனில், இந்தியர்களும் சீனர்களும் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் திரும்ப முடியும் என்பதால், அவர்கள் இங்கு வரவேற்கப்படுவதில்லை என்று அவர் கருதினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 25, 2026, 12:44 pm
திரெங்கானு மாநில ஆட்சியாளர் சுல்தான் மிஸான் நலமுடன் உள்ளார்: திரெங்கானு அரண்மனை தகவல்
July 25, 2026, 12:43 pm
