செய்திகள் மலேசியா
ஜொகூரைப் போல் மற்ற மாநிலங்களும் பட்டதாரிகளுக்கு 4,000 ரிங்கிட்டை சம்பளமாக வழங்க வேண்டும்: சார்லஸ்
கிள்ளான்:
ஜொகூரைப் போல் மற்ற மாநிலங்களும் பட்டதாரிகளுக்கு 4,000 ரிங்கிட்டை சம்பளமாக வழங்க வேண்டும்.
கிள்ளான் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ இதனை வலியுறுத்தினார்.
ஜொகூர் மாநிலத்தின் உயர் ஊதியத் திட்டத்தை மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும்.
இந்த நடவடிக்கை உள்ளூர் திறமையாளர்களைத் தக்கவைத்துக் கொள்ளவும், வெளிநாடுகளில் உள்ள அதிக சம்பளம் தரும் வேலைகளின் ஈர்ப்பைக் குறைக்கவும் உதவும்.
புதிய பட்டதாரிகளுக்கான தொடக்கச் சம்பளத்தை 4,000 ரிங்கிட், அதற்கு மேல் நிர்ணயித்த ஜொகூர் மந்திரி பெசார் ஓன் ஹபிஸ் காஸியின் நடவடிக்கை பாராட்டுக்குரியது.
கோலாலம்பூர், சிலாங்கூரில் முறையே 25.6% மற்றும் 29.3% வேலை இழப்புகள் பதிவாகியுள்ள நிலையில், இந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் ஜொகூர் திறமை மேம்பாட்டுக் கழகம் 7,773 வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த ஜொகூர் பிரிமியம் சம்பளத் திட்டம் சரியான நேரத்தில் வந்துள்ளது.
மேலும், கடந்த பிப்ரவரியில் 900க்கும் மேற்பட்ட மாணவர்கள் எஸ்பிஎம் தேர்வை எழுதவில்லை.
அவர்களில் சிலர் சிறந்த சம்பளத்திற்காக சிங்கப்பூரில் வேலைக்குச் செல்லத் தேர்ந்தெடுத்தனர் என்று வந்த அறிக்கைகளையும் அவர் மேற்கோள் காட்டினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 27, 2026, 8:14 pm
அரச நிறுவனங்களை மதிப்பதுடன் 3ஆர் பிரச்சினைகளைத் தொடுவதைத் தவிர்க்க வேண்டும்: ஜாஹித்
July 27, 2026, 8:12 pm
முட்டைகள் வாங்கியபோது முகமூடி அணிந்த சந்தேக நபரால் சுடப்பட்டதில் ஆடவர் காயம்
July 27, 2026, 8:10 pm
ஒற்றுமையும் வேல் சக்தியும் இந்திய மாணவர்களின் கல்வி வெற்றிக்கு வழிகாட்டும்: சுரேன் கந்தா
July 27, 2026, 8:08 pm
அயோப் கானின் மரபு போலிஸ் அதிகாரிகளுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும்: ஐஜிபி
July 27, 2026, 5:05 pm
