செய்திகள் மலேசியா
கெடிலான் உதவித் தலைவர்களாக சைபுடின், ஜலேஹா நியமனம்
கோலாலம்பூர்:
கெடிலான் கட்சியின் உதவித் தலைவர்களாக டத்தோஸ்ரீ சைபுடின் நசுதியோன், டாக்டர் ஜலேஹா முஸ்தபா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜொகூர், நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களுக்குத் தயாராகி வரும் நிலையில் இந்நியமனம் நடந்துள்ளது.
ஜொகூரின் பத்து பகாட் நகரில் இன்று நடைபெற்ற கெஅடிலான் அரசியல் குழு, மத்திய தலைமை மன்றத்தின் மாதாந்திரக் கூட்டத்தில் இந்த நியமனங்கள் செய்யப்பட்டதாக கெஅடிலான் தகவல் பிரிவுத் தலைவர் ஃபஹ்மி ஃபட்ஸில் தெரிவித்தார்.
மத்திய அளவில் கட்சியின் அமைப்பையும் பணிகளையும் மேலும் வலுப்படுத்தவும் ஒருங்கிணைக்கவும் இந்த நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன.
டத்தோஸ்ரீ சைபுடின் இதற்கு முன்பு கெஅடிலானின் பொதுச் செயலாளராக இருந்தார்.
அதே சமயம் ஜலேஹா தற்போது கெஅடிலான் ஜொகூர் தலைவராக உள்ளார்.
நியமிக்கப்பட்ட மூன்று உதவித் தலைவர்களாக ரோலண்ட் எங்கனுடன் இவர்கள் இணைகின்றனர் என்று ஃபஹ்மி கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 12, 2026, 5:37 pm
ஜொகூர் மாநில மந்திரி புசாராக டத்தோ ஓன் ஹபிஸ் காஸி பதவியேற்றார்
July 12, 2026, 2:25 pm
ங்கா கோர் மிங் தனது ராஜினாமா வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்: கைரி
July 12, 2026, 2:24 pm
நஜிப் விடுதலையானால் தான் நான் ராஜினாமா செய்வேன்; தேசிய முன்னணியின் வெற்றியால் அல்ல: ங்கா
July 12, 2026, 1:53 pm
ஜாஹித் ஹமிடி, ஓன் ஹபிஸ் ஆகியோர் சுல்தான் இப்ராஹிமை சந்தித்தனர்
July 12, 2026, 12:12 pm
ஜோகூர் தேர்தல்: 55 வேட்பாளர்கள் வைப்புத்தொகையை இழந்தனர்
July 12, 2026, 10:41 am
