செய்திகள் மலேசியா
திவேட் 2.0 திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள 50 மில்லியன் ரிங்கிட் நிதி முழுமையாகப் பயன்படுத்தப்படுவதை மனிதவள அமைச்சு உறுதி செய்யும்: டத்தோஸ்ரீ ரமணன்
புத்ராஜெயா:
திவேட் 2.0 திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள 50 மில்லியன் ரிங்கிட் நிதி முழுமையாகப் பயன்படுத்தப்படுவதை மனிதவள அமைச்சு உறுதி செய்யும்.
மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனை கூறினார்.
திவேட் 2.0 திட்டத்தை செயல்படுத்துவதற்கு ஆதரவளிப்பதற்காக திறன் மேம்பாட்டு நிதிக் கழகத்தின் கீழ் உள்ள உயர் தாக்கத் திட்ட நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட் வரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதனை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று அறிவித்தார்.
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி முழுமையாகப் பயன்படுத்தப்படுவதை மனிதவள அமைச்சு உறுதி செய்யும்.
மேலும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு வலுவூட்டும் முயற்சியாகவும், நாட்டின் திறமைகளையும் தொழில் வாழ்க்கையையும் மேம்படுத்துவதற்கான பிரதான பாதையாக திவேட் பயிற்சியை முக்கிய நீரோட்டத்தில் கொண்டு வருவதற்காகவும், உயர் தாக்கத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
எதிர்காலப் பணியாளர் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, நாட்டின் திறன் மேம்பாட்டுச் சூழலமைப்பை வலுப்படுத்தவும் இந்த முயற்சி உதவும்.
இந்த ஒதுக்கீடு மீள்திறன் கொண்ட உயர் திறன் வாய்ந்த, தொழில்துறை தேவைகளுக்கு ஏற்ப நாட்டின் எதிர்காலத் திறமையாளர்களை உருவாக்குவதில் மடானி அரசாங்கத்தின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய உந்துசக்தியாக மனித மூலதன மேம்பாட்டை வலியுறுத்தும் 13ஆவது மலேசியத் திட்டம், புதிய தொழில்துறை பெருந்திட்டம், தேசிய எரிசக்தி மாற்றத்திற்கான செயல்திட்டம் ஆகியவற்றின் இலக்குகளுக்கு ஏற்பவும் இந்த முயற்சி அமைந்துள்ளது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 27, 2026, 8:14 pm
அரச நிறுவனங்களை மதிப்பதுடன் 3ஆர் பிரச்சினைகளைத் தொடுவதைத் தவிர்க்க வேண்டும்: ஜாஹித்
July 27, 2026, 8:12 pm
முட்டைகள் வாங்கியபோது முகமூடி அணிந்த சந்தேக நபரால் சுடப்பட்டதில் ஆடவர் காயம்
July 27, 2026, 8:10 pm
ஒற்றுமையும் வேல் சக்தியும் இந்திய மாணவர்களின் கல்வி வெற்றிக்கு வழிகாட்டும்: சுரேன் கந்தா
July 27, 2026, 8:08 pm
அயோப் கானின் மரபு போலிஸ் அதிகாரிகளுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும்: ஐஜிபி
July 27, 2026, 5:05 pm
