செய்திகள் விளையாட்டு
மின்னல் வேகத்தில் பாய்ந்த உமார்: 400 மீட்டரில் புதிய மலேசிய தேசிய சாதனை
கோலாலம்பூர்:
மலேசிய தடகள உலகில் மீண்டும் வரலாறு படைத்துள்ளார் தேசிய ஓட்டப்பந்தய வீரர் உமார் ஒஸ்மான். தைவான் ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், ஆடவர் 400 மீட்டர் ஓட்டத்தில் 45.73 வினாடிகளில் இலக்கை எட்டி புதிய தேசிய சாதனையைப் பதிவு செய்தார்.
ஜொகூரைச் சேர்ந்த 23 வயதான உமார், 2023-ஆம் ஆண்டு சீனாவின் செங்டுவில் நடைபெற்ற உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டியில் தானே படைத்திருந்த 46.09 வினாடிகள் என்ற முந்தைய தேசிய சாதனையை முறியடித்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
இன்றைய இரண்டாவது தகுதிச்சுற்றில் ஏழாவது பாதையில் களமிறங்கிய உமார், ஆஸ்திரேலிய வீரர் பிரென்டன் கெர்ரின் கடும் சவாலை எதிர்கொண்ட போதிலும் அபார ஓட்டத்தை வெளிப்படுத்தினார்.
குறிப்பாக கடைசி 50 மீட்டரில் மின்னல் வேகத்தை வெளிப்படுத்திய அவர், போட்டியாளர்களைப் பின்னுக்குத் தள்ளி அசத்தலான சாதனையைப் பதிவு செய்தார்.
இது வெறும் தகுதிச்சுற்று போட்டியாக இருந்தாலும், தேசிய சாதனையைப் புதுப்பித்திருப்பது மலேசிய தடகளத்திற்கு பெருமை சேர்த்துள்ளது.
வரும் செப்டம்பரில் நடைபெறவுள்ள அய்ச்சி-நகோயா ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான முக்கிய வீரர்களில் ஒருவராகக் கருதப்படும் உமாருக்கு, இந்த வெற்றி புதிய தன்னம்பிக்கையையும் உற்சாகத்தையும் அளித்துள்ளது.
ஒரு சாதனையை உடைத்ததோடு மட்டுமல்லாமல், மலேசிய தடகளத்தின் எதிர்கால நம்பிக்கையாகவும் உமார் ஒஸ்மான் மீண்டும் தன்னை நிரூபித்துள்ளார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
July 12, 2026, 11:33 am
உலகக் கிண்ணத்தில் விளையாடிய தென்னாப்பிரிக்கா அணியின் வீரர் ஜேய்டன் ஏடம்ஸ் மரணம்
July 12, 2026, 9:32 am
நார்வே பெருமை கொள்ளலாம்: ஒடாகார்ட்
July 12, 2026, 9:31 am
உலகக் கிண்ணம்: நார்வேவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து
July 11, 2026, 8:29 am
லியோனல் மெஸ்ஸிக்கு சிறப்பு மரியாதை
July 11, 2026, 8:29 am
உலகக் கிண்ணம்: கடைசி நிமிட கோலால் ஸ்பெயின் திரில் வெற்றி
July 10, 2026, 9:00 am
எர்லிங் ஹாலண்ட் இங்கிலாந்து அணிக்கான உண்மையான அழுத்தம்
July 10, 2026, 8:58 am
உலகக் கிண்ணம்: எம்பாப்பேவின் அதிரடி ஆட்டத்தினால் அரையிறுதியில் பிரான்ஸ்
July 9, 2026, 11:57 am
FIFA உலகக் கிண்ண காலிறுதி சுற்று ஆட்டம்: பிரான்ஸ், மொரொக்கோ அணிகள் மோதல்
July 9, 2026, 10:42 am
