நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

மெஸ்ஸி முடிவெடுத்துவிட்டார்: பரேடேஸ்

போனஸ் அயர்ஸ்:

39 வயதான கேப்டன் லியோனல் மெஸ்சி தனது அனைத்துல்க விளையாட்டு வாழ்க்கை குறித்து முடிவெடுத்திருக்கலாம் என சக வீரர் லியாண்ட்ரோ பரேடெஸ் சூசகமாகத் தெரிவித்தார்.

இதை அடுத்து அர்ஜெண்டினா தேசிய அணியுடனான அவரது எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

மெஸ்ஸி தனது அடுத்தகட்ட நகர்வு குறித்து ஏற்கனவே முடிவெடுத்திருக்கலாம் என்று பரேடெஸ் ஒப்புக்கொண்டாலும், 

எட்டு முறை பலோன் டி ஓர் விருது வென்ற அவர் தொடர்ந்து அர்ஜெண்டினா அணிக்காக விளையாடுவார் என அவரது சக வீரர்கள் இன்னும் நம்புகிறார்கள்.

அவர் தனது முடிவை எடுத்துவிட்டார் என்று நான் நினைக்கிறேன். 

அது நடக்காது என்றும், அவர் தொடர்ந்து விளையாடுவார் என்றும் நான் நம்புகிறேன், ஆனால் அந்த முடிவு அவருடையது.

அவருக்கு எது மகிழ்ச்சியைத் தருகிறதோ, அதில் நாங்களும் மகிழ்ச்சியடைவோம் என்று  எக்ஸ் தளத்தில் பகிர்ந்த ஒரு நேர்காணலில் பரேடெஸ் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset