நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

13 தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அனைத்துலக காற்பந்து அரங்கில் தடம் பதித்தனர்: மாணவர்களுக்குப் பாராட்டு விழாவும் சிறப்பும் செய்யப்பட்டது 

கிள்ளான்: 

தமிழ்ப்பள்ளி மாணவர்கள் காற்பந்து துறையில் ஜொலிக்கவும் அவர்கள் அடுத்த கட்டத்திற்கு முன்னேறி செல்லவும் மித்ரா எஃப் சி முனைப்பு காட்டுகிறது 

இந்நிலையில் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகளில் கிட்டத்தட்ட 13 சிறந்த காற்பந்து விளையாட்டாளர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் சீனா நாட்டிற்கு சென்று பயிற்சி அளிக்கப்பட்டனர். 

மித்ரா எஃப் சி 2026 ஹெங்யாங் யூத் இண்டர்நேஷனல் போட்டியில் கலந்து கொண்டனர். 

இந்நிலையில் இன்று கிள்ளான் கண்ணா கறி ஹவுஸ்ஸில் நடந்த பாராட்டு விழாவில் சிலாங்கூர் ம.இ.கா பிரமுகர்கள், தொகுதி, கிளை தலைவர்கள், பெற்றோர்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். 

மேலும், மித்ரா எஃப் சி அணி தொடர்ந்து இந்திய சமூகத்தில் உள்ள இந்திய இளைஞர்கள் காற்பந்து துறையில் கால் பதிக்கவும் அவர்களின் திறமையை அடையாளம் காணவும் வழிவகை செய்யும் என்று மித்ரா எஃப் சி அணியின் தோற்றுநர் திரு. சரஸ்குமார் தெரிவித்தார்.

-மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset