செய்திகள் விளையாட்டு
அனைத்துலக கால்பந்திலிருந்து ஓய்வு பெறும் மெஸ்சி? பிரியாவிடை போட்டிக்கு அர்ஜெண்டினா ஏற்பாடு செய்வதாக தகவல்…!
போனஸ் அயர்ஸ்:
அனைத்துலக கால்பந்திலிருந்து அர்ஜெண்டின வீரர் லியோனல் மெஸ்சி ஓய்வு அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
2026 பிபா உலகக் கிண்ண போட்டி தான் அர்ஜெண்டினா அணிக்காக லியோனல் மெஸ்ஸியின் கடைசிப் போட்டியாக இருக்கும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தொடரின் இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனாக இருந்த அர்ஜெண்டினாவை வீழ்த்தி ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டம் பெற்றது. தோல்வியையடுத்து அரங்கத்தில் மெஸ்சி அர்ஜெண்டினா ரசிகர்கள் உடைந்த அழுதது சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் அனைத்துலக கால்பந்திலிருந்து மெஸ்சி ஓய்வு அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக அர்ஜெண்டினா ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவல்களின் படி,
அர்ஜெண்டினா அணிக்காக, அடுத்த சில மாதங்களுக்கு அவர் தொடர்ந்து விளையாட விரும்புவதாகத் தெரிகிறது.
ஆனால் மற்றொரு உலகக் கிண்ண போட்டியில் அவர் பங்கேற்பது கடினம்.
மெஸ்சிக்காக ஒரு சிறப்பு வாய்ந்த பிரியாவிடைப் போட்டியை ஏற்பாடு செய்ய அர்ஜெண்டினா கால்பந்து சங்கம் திட்டமிட்டு வருகிறது.
இந்த நிகழ்வு, மெஸ்ஸிக்கும் அவரது ரசிகர்களுக்கும் மறக்க முடியாததாக அமையும் என்றும் கூறப்படுகிறது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 25, 2026, 12:07 pm
புக்கிட் ஜாலில் விளையாட்டரங்கம் ஓடுதள பாதையின் முதல் பகுதி அகற்றும் பணி தொடக்கம்
July 24, 2026, 8:29 am
அர்ஜென்டினாவுக்கு வழிகாட்டும் ஆற்றல் மெஸ்ஸிக்கு உள்ளது
July 24, 2026, 8:26 am
80,000 ரசிகர்கள் உலகக் கிண்ண இறுதிப் போட்டி மீண்டும் நடத்தப்பட வேண்டும் என விரும்புகிறார்கள்
July 23, 2026, 11:24 am
லிவர்புல் எஃப் சி அணியின் பங்குகளை வாங்க உலகின் நான்காவது பணக்காரர் பெஸொஸ் ஆர்வம்
July 23, 2026, 9:25 am
