நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

2026 காமன்வெல்த் போட்டி: முஹம்மத் அஸ்னில் தங்கப் பதக்கம் வென்றார்

ஸ்காட்லாந்து:

2026-ஆம் ஆண்டு க்ளாஸ்கோவ் காமன்வெல்த் போட்டியில் தேசிய பளுதூக்கும் வீரர் முஹம்மத் அஸ்னில் பிடின் தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்தார்.

=இப் போட்டியில், 65 கிலோகிராம் எடைப் பிரிவில் , தொடர்ந்து மூன்றாவது முறையாக அவர் தங்கப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.

இந்த வெற்றியின் மூலம், இதுவரை மலேசியக் குழுவுக்கு இரண்டாவது தங்கப் பதக்கத்தை அவர் பெற்றுத் தந்துள்ளார்.

ஸ்கோட்டிஷ் ஈவண்ட் கெம்பஸ், எஸ்.ஈ.சி அரங்கில் நடைபெற்ற போட்டியில், முஹமட் அஸ்னில் ஸ்னெட்ச் பிரிவில் 133 கிலோகிராம் எடையையும், க்ளீன் - ஜெர்க் பிரிவில் 166 கிலோகிராம் எடையையும் தூக்கி தனது திறமையை நிரூபித்தார்.

இதன் மூலம், மொத்தமாக 299 கிலோகிராம் எடையைத் தூக்கி அவர் வெற்றியாளர் பட்டத்தை வென்றார்.

மேலும் சிறப்பாக, இந்த மூன்று சாதனைகளும் நடப்பு காமன்வெல்த் போட்டியின் புதிய சாதனைகளாக பதிவாகின.

இதில், இரண்டாம் இடத்தில் வெள்ளிப் பதக்கத்தை இந்திய வீரர் ராஜா முத்துபாண்டியும், வெண்கலப் பதக்கத்தை பப்புவா நியூ கினியின் மொரியா பாருவும் வென்றனர்.

32 வயதான முஹமட் அஸ்னில், 2018ஆம் ஆண்டு கோல்ட் கோஸ்ட் மற்றும் 2022ஆம் ஆண்டு பிர்மிங்ஹம் காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வென்றதைத் தொடர்ந்து, மூன்று காமன்வெல்த் போட்டிகளில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்ற முதல் மலேசிய வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.

-பெர்னாமா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset