செய்திகள் விளையாட்டு
ஜெர்மனி அணியின் பயிற்சியாளராக ஜர்கன் குளோப் நியமனம்
முனிச்:
ஜெர்மனி அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ஜர்கென் குளோப் நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
ஜெர்மனி கால்பந்து அணி 2014ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை 4ஆவது முறையாக கைப்பற்றிய பிறகு தொடர்ந்து தடுமாறுகிறது.
2018, 2022ஆம் ஆண்டு உலகக் கிண்ண லீக் சுற்றுடன் நடையை கட்டிய ஜெர்மனி இந்த முறை 2ஆவது சுற்றில் பராகுவேயிடம் பெனால்டியில் பணிந்தது.
மோசமான தோல்வி எதிரொலியாக பயிற்சியாளர் ஜூலியன் நாகல்ஸ்மேன் விலகினார்.
இந்த நிலையில் ஜெர்மனி அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ஜர்கென் குளோப் நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
2030ஆம் ஆண்டு உலகக் கிண்ண வரை அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.
நேற்று நிருபர்களிடம் பேசிய அவர், இந்த வேலையை விரும்புகிறேன்.
ஆனால் தேவைப்பட்டால் அதில் இருந்து விலகவும் எப்போதும் தயாராக இருக்கிறேன்.
ஊடகத்தினர் எனது குடும்பத்தினருக்கு தொல்லை கொடுத்து அவர்களை நிம்மதியாக இருக்க விடாமல் செய்தால் நான் விலகி விடுவேன் என்றார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 26, 2026, 1:50 pm
மெஸ்ஸி முடிவெடுத்துவிட்டார்: பரேடேஸ்
July 25, 2026, 12:07 pm
புக்கிட் ஜாலில் விளையாட்டரங்கம் ஓடுதள பாதையின் முதல் பகுதி அகற்றும் பணி தொடக்கம்
July 24, 2026, 8:29 am
அர்ஜென்டினாவுக்கு வழிகாட்டும் ஆற்றல் மெஸ்ஸிக்கு உள்ளது
July 24, 2026, 8:26 am
