நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இந்திய இளைஞர்களை காற்பந்து துறையில் மிளிர செய்ய மித்ரா எஃப் சி  பாடுபடும்: சீனாவிலிருந்து வந்த விளையாட்டாளர்களுக்கு பாராட்டு விழா 

கிள்ளான்: 

மித்ரா எஃப் சி அணி காற்பந்து  துறையில் கடந்த 19 வருடங்களாக செயல்பட்டு வருகிறது. மீஃபா போட்டியின் காரணமாக சுமார் 13 காற்பந்து விளையாட்டாளர்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்பட்டு சீனா நாட்டிற்கு பயணம் மேற்கொண்டோம் என்று மித்ரா எஃப் சி அணியின் தோற்றுநரும் பயிற்சியாளருமான திரு. சரஸ்குமார் கூறினார். 

நமது இந்திய சமுதாயம், மலேசியா மட்டுமல்லாமல் வெளிநாட்டிலும் காற்பந்து துறையில் தடம் பதிக்கவும் அவர்களின் தரத்தை உயர்த்தவும் இது உதவும் என்று அவர் தெரிவித்தார். 

நாட்டிற்காக விளையாடிய இந்திய வீரர்களான வி.ஆறுமுகம், சந்தோக் சிங் ஆகிய விளையாட்டாளர்களை எதிர்காலத்தில் உருவாக்கிட  வேண்டும் என்பதே எங்களின் முதன்மையான குறிக்கோள் 

எதிர்காலத்தில் மலேசியா காற்பந்து தேசிய அணியில் குறைந்தபட்சம் 5 அல்லது 6 இந்தியர்கள் இடம்பெற வேண்டும். அதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக அவர் நம்பிக்கை ஊடகத்திடம் தெரிவித்தார். 

ஒரு சாதாரண காற்பந்து அணியான மித்ரா எஃப் சி இந்த முன்னெடுப்பை எடுக்க முடிந்தால் ஏன் மற்றவர்கள் இதனை செய்ய முடியாது. 

நாம் அனைவரும் ஒன்றிணைந்து முயற்சிகள் செய்தால் நம் இந்திய சமுதாயத்தில் மாற்றத்தை கொண்டு வர முடியும் என்று அவர் சொன்னார். 

அடுத்து செப்டம்பர் 5ஆம் தேதி நடக்கும் மீஃபா காற்பந்து போட்டிக்கு மித்ரா எஃப் சி தயாராகி வருவதாக அவர் குறிப்பிட்டார். 

முன்னதாக, சிலாங்கூர் மாநில ம.இ.காவும் ம.இ.கா விளையாட்டு பிரிவு ஏற்பாடு செய்திருந்த பாராட்டு விழாவில் 13 மாணவர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது. 

இந்த 13 காற்பந்து விளையாட்டாளர்களும் சீனா நாட்டிற்கு சென்று காற்பந்து குறித்த அனுபவங்களைப் பெற்றுக்கொண்டனர்.

-மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset