நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

சிப்பாங்கிற்கு பார்முலா 1 போட்டி திரும்புவது ஒரு அசாதாரண வரவேற்பைப் பெறும்: டான்ஸ்ரீ மொக்ஸானி மகாதீர்

கோலாலம்பூர்:

சிப்பாங்கிற்கு பார்முலா 1 போட்டி திரும்புவது ஒரு அசாதாரண வரவேற்பைப் பெறும்.

மலேசிய மோட்டார் பந்தய சங்கத்தின் தலைவர் டான்ஸ்ரீ மொக்ஸானி மகாதீர் இதனை கூறினார்.

சிப்பாங் அனைத்துலக பந்தயத் தளத்திற்கு பார்முலா 1 கார்பந்தயப் போட்டி திரும்பவுள்ளது.
இது மலேசியா, ஆசியப் வட்டாரத்தில் உள்ள கார் பந்தய ரசிகர்களிடமிருந்து ஒரு அசாதாரண வரவேற்பைப் பெறும்.

2026 பஹ்ரைன் கிராண்ட் பிரி பந்தயத்தை சிப்பாங் அனைத்துலக பந்தயத் தளத்தில் நடத்தும் என அறிவிக்கப்பட்டது எதிர்பாராதது.

மேலும் 2017இல் கடைசியாக சிப்பாங்கில் நடைபெற்ற இந்த மதிப்புமிக்க பந்தயத்தின் உற்சாகத்தை இது மீட்டெடுக்கும் என்று நம்பப்படுகிறது என்றார்.

பார்முலா ஒன் சிப்பாங் அனைத்துலக  பந்தயத் தளத்திற்கு திரும்பும் என்று நான் நினைக்கவில்லை.

ஆனால் இந்தப் பந்தயம் மலேசியாவிலும் ஆசியப் பிராந்தியம் முழுவதிலும் உள்ள மோட்டார் பந்தய ரசிகர்களால் மிகவும் சிறப்பாக வரவேற்கப்படும் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்றார் அவர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset