நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

சிப்பாங்கில் நடைபெறவுள்ள பஹ்ரைன் கிராண்ட் பிரிக்ஸ் பந்தயம்: அனைத்து வருமானமும் பஹ்ரைனுக்கே செல்லும் 

கோலாலம்பூர்- 

கோலாலம்பூர், சிப்பாங்கில் நடைபெறவுள்ள பஹ்ரைன் கிராண்ட் பிரிக்ஸ் பந்தய போட்டியின் அனைத்து வருமானமும் பஹ்ரைனுக்கே செல்லும் என்று சிப்பாங் பன்னாட்டு சுற்றரங்கின் தலைமை நிர்வாக அதிகாரி அஜான் ஷஃப்ரிமான் ஹனிஃப் கூறினார். 

சிப்பாங் பந்தய தளத்தில் எதிர்வரும் அக்டோபர் 2 முதல் 4 வரை நடைபெறவுள்ள இந்த நிகழ்வுக்கான ஏற்பாட்டுக் கட்டணத்தை பஹ்ரைன் ஏற்றுக்கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன 

இந்தத் தொகையானது நூற்றுக்கணக்கான மில்லியன் ரிங்கிட் வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

டிக்கெட் விற்பனை மூலம் கிடைக்கும் அனைத்து வருமானமும் பஹ்ரைனுக்கு வழங்கப்படும் என்றும், டிக்கெட் விலையையும் அவர்களே நிர்ணயிப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து பஹ்ரைன் நாட்டு தரப்புடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக அவர் கூறினார். 

மலேசியர்களுக்காகச் சிறப்பான விலையைப் பெற தன்னால் இயன்றவரை முயற்சிப்பதாகவும் கூறிய அவர், எனினும் இறுதி முடிவு பஹ்ரைனின் கைகளில்தான் உள்ளது என்றார்.

மலேசியாவில் உள்ள சிப்பாங் பந்தய தளத்தில் பஹ்ரைன் F1 GRAND PRIX பந்தய போட்டி நடக்கும் என்று கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது. 

மேற்கு ஆசியாவில் நிலவிய நிச்சயமற்ற அரசியல் மோதல் காரணமாக பந்தயம் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து 2026 F1 கால அட்டவணையில் BAHRAIN GRAND PRIX இடம்பெறுவதை இந்த ஒப்பந்தம் அனுமதிக்கிறது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset