செய்திகள் விளையாட்டு
ஆசியான் கால்பந்து போட்டியில் மலேசியா அணி தனது ஆதிக்கத்தைத் தொடர்கிறது; புரூணையை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது
மேடான்:
2026 ஆசியான் 19 வயதுக்கு கீழ்ப்பட்டவர்களுக்கான கால்பந்து போட்டியில் மலேசிய அணியின் ஆதிக்கம் தொடர்கிறது.
மேடானில் உள்ள தெலாடான் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் மலேசிய அணி 4-0 என்ற கோல் கணக்கில் புரூணை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
சிங்கப்பூருக்கு எதிராக 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இந்தத் தொடரைத் தொடங்கிய ஹரிமாவ் மலாயா மூடா அணி, மீண்டும் தனது ஆற்றல்மிக்க ஆட்டத்தை வெளிப்படுத்தி மூன்று புள்ளிகளை கைப்பற்றியது.
அதே வேளையில் இத்தொடரில் இதுவரை தனது 100 சதவீத வெற்றிப் பதிவையும் அவ்வணி தக்கவைத்துக் கொண்டது.
ஆட்டத்தின் 22ஆவது நிமிடத்தில் புரூணை வீரர் மஹ்மூத் காலிஷ் தவறுதலாக மலேசிய அணிக்கு ஒரு கோலை அடித்தார்.
முதல் பாதியின் கூடுதல் நேரத்தில் (45+3') முஹம்மது அர்ஷத் ஷம்சுல் அஸ்வாடி கோல் அடித்து நாட்டின் கோல் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கினார்.
பிற்பாதியின் 84ஆவது நிமிடத்தில் போட்டியில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்தது.
தேசிய அணியின் நடுக்கள வீரரான ஆர். பிரவினாஷ், புரூணை அணியின் தடுப்பாட்டத்தை தாண்டி கொண்டு நக்கிப் பிர்ஹாத்திடம் பந்தை அனுப்பினார்.
இருப்பினும், நக்கிஃபின் முயற்சி இலக்கிலிருந்து சற்றே விலகிச் சென்றதால் மலேசியாவின் கோல் எண்ணிக்கையை அதிகரிக்கத் தவறியது.
அந்த வாய்ப்பு கோலாக முடியாவிட்டாலும் அது பிரவினாஷின் படைப்பாற்றலையும், தாக்குதல்களை ஒழுங்கமைக்கும் திறமையையும் தெளிவாகக் காட்டியதுடன், நாட்டின் இளம் வீரர்களின் தரம் குறித்த ஒரு நேர்மறையான எண்ணத்தையும் அளித்தது.
ஆட்டத்தின் இறுதியில், 90+2ஆவது நிமிடத்தில் முகமது இர்ஃபான் ஹஃபிஸான் மூலம் மலேசியா மேலும் மூன்றாவது கோல் கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து, 90+4-ஆவது நிமிடத்தில் முகமது இர்பான் அஸ்வத் நான்காவது கோலை அடித்தார்.
இதைத் தொடர்ந்து மலேசிய அணியினர் 4-0 என்ற கோல் கணக்கில் புரூணை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 12, 2026, 11:33 am
உலகக் கிண்ணத்தில் விளையாடிய தென்னாப்பிரிக்கா அணியின் வீரர் ஜேய்டன் ஏடம்ஸ் மரணம்
July 12, 2026, 9:32 am
நார்வே பெருமை கொள்ளலாம்: ஒடாகார்ட்
July 12, 2026, 9:31 am
உலகக் கிண்ணம்: நார்வேவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து
July 11, 2026, 8:29 am
லியோனல் மெஸ்ஸிக்கு சிறப்பு மரியாதை
July 11, 2026, 8:29 am
உலகக் கிண்ணம்: கடைசி நிமிட கோலால் ஸ்பெயின் திரில் வெற்றி
July 10, 2026, 9:00 am
எர்லிங் ஹாலண்ட் இங்கிலாந்து அணிக்கான உண்மையான அழுத்தம்
July 10, 2026, 8:58 am
உலகக் கிண்ணம்: எம்பாப்பேவின் அதிரடி ஆட்டத்தினால் அரையிறுதியில் பிரான்ஸ்
July 9, 2026, 11:57 am
FIFA உலகக் கிண்ண காலிறுதி சுற்று ஆட்டம்: பிரான்ஸ், மொரொக்கோ அணிகள் மோதல்
July 9, 2026, 10:42 am
