நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

அர்ஜெண்டினா அணியின் தற்காப்பு ஆட்டக்காரர் நிகொலஸ் ஒதாமெண்டி அனைத்துலக காற்பந்து போட்டிகளிலிருந்து ஓய்வு 

பியூனஸ் அயர்ஸ்-

அர்ஜெண்டினா காற்பந்து அணியின் தற்காப்பு ஆட்டக்காரர் நிகொலஸ் ஒதாமெண்டி அனைத்துலக காற்பந்து போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 

கடந்த 17 ஆண்டுகளாக அர்ஜெண்டினா அணியில் விளையாடி வந்த அவர் 2022 உலக கிண்ணத்தையும் இரு கோப்பா அமெரிக்கா கிண்ணத்தையும் வென்றுள்ளார் 

38 வயதான இந்த தற்காப்பு ஆட்டக்காரர்,  தனது நாட்டிற்காக 139 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

மேலும், இந்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற FIFA உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு முன்னேறிய அணியிலும் அவர் இடம்பெற்றிருந்தார்.

இருப்பினும் இறுதிப்போட்டியில் ஸ்பெயின் அர்ஜெண்டினா அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது 

நிகொலஸ்  ஒதாமெண்டி ஐரோப்பாவில் உள்ள முன்னணி அணிகளான போர்த்தோ, மென்செஸ்டர் சிட்டி, வெலென்சியா, பென்ஃபிகா ஆகிய அணிகளில் விளையாடியுள்ளார். 

தற்போது அவர் அர்ஜெண்டினா நாட்டின் முன்னணி காற்பந்து அணியான ரிவர் ப்லேட் அணியில் இணைந்துள்ளார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset