செய்திகள் விளையாட்டு
அர்ஜென்டினாவுக்கு வழிகாட்டும் ஆற்றல் மெஸ்ஸிக்கு உள்ளது
போனஸ் அயர்ஸ்:
2026 உலகக் கிண்ண போட்டிக்கு பிறகு லியோனல் மெஸ்ஸி அர்ஜெண்டினா தேசிய அணியை விட்டு வெளியேறாமல் இருக்கலாம்.
ஆனால் அதற்குப் பதிலாக அணியின் புதிய தலைமுறைக்கு ஒரு வழிகாட்டியாகப் பணியாற்றும் ஆற்றல் அவருக்கு உள்ளது.
நியூ ஜெர்சியில் நடந்த இறுதிப் போட்டியில் ஸ்பெயினிடம் தோற்று, அர்ஜெண்டினா அணி தனது உலகக் கிண்ண பட்டத்தைத் தக்கவைக்கத் தவறியதால், 39 வயதான அர்ஜெண்டினா கேப்டனின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
இருப்பினும், மெஸ்ஸி இப்போது ஒரு முக்கிய வீரராக இல்லாவிட்டாலும், அவரால் அர்ஜெண்டினாவுக்கு இன்னும் பங்களிக்க முடியும் என்று தென் அமெரிக்க கால்பந்து நிபுணர் டிம் விக்கரி நம்புகிறார்.
விக்கரியின் கூற்றுப்படி, தேசிய அணியின் பாரம்பரியத்தைத் தொடர முக்கியமான வேட்பாளர்களில் ஒருவராகக் கருதப்படும் நிக்கோ பாஸ் போன்ற இளம் வீரர்களுக்கு வழிகாட்டுவதே எதிர்காலத்தில் மெஸ்ஸியின் பங்காக இருக்கலாம்.
அவர் அர்ஜெண்டினாவுக்கு மாஸ்டர் யோடாவைப் போல இருக்க முடியும். அவர் தொடர்ந்து அணியில் இருந்து, இளம் வீரர்களுக்கு உதவியும் வழிகாட்டியும் வரலாம்.
அவர் விரும்பினால், அர்ஜெண்டினாவின் புதிய தலைமுறை வீரர்களின் வளர்ச்சியில் ஒரு முக்கியப் பங்கை ஆற்ற முடியும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 24, 2026, 8:26 am
80,000 ரசிகர்கள் உலகக் கிண்ண இறுதிப் போட்டி மீண்டும் நடத்தப்பட வேண்டும் என விரும்புகிறார்கள்
July 23, 2026, 11:24 am
லிவர்புல் எஃப் சி அணியின் பங்குகளை வாங்க உலகின் நான்காவது பணக்காரர் பெஸொஸ் ஆர்வம்
July 23, 2026, 9:25 am
பிபா தலைவர் பதவி விலக வேண்டும்: டெபாஸ்
July 23, 2026, 9:21 am
