செய்திகள் மலேசியா
ஜொகூர் மாநிலத் தேர்தலுக்கான வேட்பாளர்கள்; மஇகா, மசீச தலைவர்களுடன் நாளை விவாதிக்கப்படும்: ஜாஹித்
புத்ராஜெயா:
ஜொகூர் மாநிலத் தேர்தலுக்கான வேட்பாளர்களை இறுதி செய்ய மஇகா, மசீச தலைவர்களுடன் நாளை விவாதிக்கப்படும்.
தேசிய முன்னணி தலைவரும் துணைப் பிரதமருமான டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி இதனை தெரிவித்தார்.
ஜொகூர் மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டதை தொடர்ந்து விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலில் தேசிய முன்னணி அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடவுள்ளது.
ஆக இந்த மாநிலத் தேர்தலுக்கான தேசிய முன்னணியின் வேட்பாளர்களை இறுதி செய்வதற்காக, நாளை கூட்டணிக் கட்சிகளுடன் சிறப்பு கூட்டம் நடைபெறும்.
ஜொகூர் தேசிய முன்னணி வேட்பாளர்களை கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுவிட்டது.
நாளை நான் கூட்டணிக் கட்சிகளுடன், குறிப்பாக மஇகா, மசீச கட்சிகளுடன், அவர்கள் தத்தமது நிலைப்பாடுகளை இறுதி செய்வதற்காகக் கலந்துரையாடுவேன்.
அதன் பின் வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்படும் என்று ஜாஹித் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 28, 2026, 12:39 pm
கூலிமில் மூன்று தொழிற்சாலைகளில் தீ விபத்து: விசாரணை தொடர்வதாக கெடா தீயணைப்பு துறை தகவல்
July 28, 2026, 12:28 pm
நம்பிக்கை கூட்டணி நிர்வாகச் செயல்திறனுக்கு முன்னுரிமை அளிக்கிறது; பதவிகளுக்கு அல்ல: ஸ்டீவன் சிம்
July 28, 2026, 12:26 pm
31,000 ஆறாம் படிவ மாணவர்கள் பொதுப் பள்ளி உதவித் தொகையைப் பெறுவார்கள்: பிரதமர்
July 28, 2026, 11:14 am
