நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நெகிரி செம்பிலான் மாநில தேர்தலில் முன்கூட்டியே வாக்களிப்பு: காலை 10 மணிவரை 34.26 விழுக்காடு வாக்குகள் பதிவு 

போர்டிக்சன்:

16ஆவது நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தலின் முன்கூட்டியே வாக்களிப்பு நடைபெற்று வருகிறது. 

காலை 10 மணிவரை 34.26 விழுக்காடு வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மலேசியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

இன்று 90 விழுக்காடு வரை வாக்குகள் பதிவு செய்யப்படலாம் என்று மலேசியத் தேர்தல் ஆணையத்தின் தலைவர் டத்தோஶ்ரீ ரம்லான் ஹருன் கூறினார். 

ஜொகூர் மாநில தேர்தலில் 94 விழுக்காடு வாக்குகள் பதிவான நிலையில் இன்று 90 விழுக்காடு வரை வாக்குகள் செல்லக்கூடும் என்று அவர் அனுமானித்தார். 

முன்கூட்டியே வாக்களிக்கும்போது காவல்துறை மற்றும் இராணுவத்தினரின் வருகை 100 சதவீதமாக இருக்கும் என்று மக்கள் கருதலாம், ஆனால் இதில் வேறு பல காரணிகளும் பங்கு வகிக்கின்றன என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

16ஆவது நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தலில் 16,467 பேர் முன்கூட்டியே வாக்களிக்க தகுதிப் பெற்றுள்ளனர். இது தபால் வாக்குகள் சேர்க்காமல் உள்ளது 

மொத்தமாக 22,339 பேர் தகுதிபெற்ற முன்கூட்டிய வாக்காளர்களாக இருக்கும் நிலையில், மீதமுள்ளவர்கள் தபால் மூலம் தங்கள் உரிமைகளைப் பயன்படுத்த விண்ணப்பித்திருந்தனர்.

16ஆவது நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைபெறவுள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset