செய்திகள் மலேசியா
100 கிரேமுக்கும் அதிகமான போதைப்பொருள் கடத்திய வழக்கு: ஆறு சகோதரர்கள், ஒரு நண்பர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது
ஈப்போ:
கடந்த வாரம் 100 கிரேமுக்கும் அதிகமான ஹெரோய்ன் போதைப்பொருளைக் கடத்தியதாக இங்குள்ள ஈப்போ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் எழுவர் குற்றஞ்சாட்டப்பட்டனர்.
அவர்களில் ஆறு பேர் சகோதரர்கள் என்றும் ஒருவர் அவர்களின் நண்பர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஜிஸ்திரேட் நோரிசான் ரிட்சுவான் முன்னிலையில் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அஃபாண்டி துல்காப்லி மற்றும் அவரது சகோதரர்களிடமிருந்து எந்தவொரு வாக்குமூலமும் பதிவுசெய்யப்படவில்லை
வேலையற்றவர்களாக இருக்கும் இந்த அனைத்துத் தரப்பினரும் கடந்த ஜூலை 21-ஆம் தேதி இரவு 9.20 மணியளவில் கூட்டாகச் சேர்ந்துள்ளனர்.
அவர்கள் ஈப்போ கீமோர், கம்போங் செ சைனால் டம்பகான் 1 பகுதியில் உள்ள ஒரு குடிசையில் 118.87 கிராம் ஹெராயின் போதைப்பொருளைக் கடத்தியதாகக் கூறப்படுகிறது.
இவர்கள் அனைவரும் 1952-ஆம் ஆண்டு அபாயகரமான போதைப்பொருள் சட்டம் பிரிவு 39B(1)(a)-இன் கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ளனர்.
மேலும், அதே சட்டம் பிரிவு 39B(2) மற்றும் குற்றவியல் சட்டம் பிரிவு 34-இன் படியும் இந்த வழக்கு இணைக்கப்பட்டு விசாரிக்கப்படுகிறது.
இந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் இவர்களுக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
ஒருவேளை மரண தண்டனை தவிர்க்கப்பட்டால், குறைந்தது 12 முறை பிரம்படி தண்டனையும் வழங்கப்பட வேண்டும்.
இந்த வழக்கின் துணை அரசு வழக்கறிஞராக ஜாரிஸ் சொபியா சைனுடின் வாதங்களை முன்வைத்தார்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் எந்தவொரு வழக்கறிஞரும் வாதாட ஆஜராகவில்லை.
இவ்வழக்கின் மேல் விசாரணை மற்றும் இரசாயன பரிசோதனை அறிக்கை சமர்ப்பிக்கும் நாள் எதிர்வரும் அக்டோபர் 22-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 28, 2026, 12:39 pm
கூலிமில் மூன்று தொழிற்சாலைகளில் தீ விபத்து: விசாரணை தொடர்வதாக கெடா தீயணைப்பு துறை தகவல்
July 28, 2026, 12:28 pm
நம்பிக்கை கூட்டணி நிர்வாகச் செயல்திறனுக்கு முன்னுரிமை அளிக்கிறது; பதவிகளுக்கு அல்ல: ஸ்டீவன் சிம்
July 28, 2026, 12:26 pm
31,000 ஆறாம் படிவ மாணவர்கள் பொதுப் பள்ளி உதவித் தொகையைப் பெறுவார்கள்: பிரதமர்
July 28, 2026, 11:14 am
