செய்திகள் மலேசியா
கூலிமில் மூன்று தொழிற்சாலைகளில் தீ விபத்து: விசாரணை தொடர்வதாக கெடா தீயணைப்பு துறை தகவல்
கூலிம்:
கெடா மாநிலத்தில் உள்ள கூலிம் நகரில் உள்ள மூன்று தொழிற்சாலைகளில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது
இந்த தீ விபத்து குறித்து தங்கள் தரப்புக்கு காலை 6.57 மணிக்கு தகவல் கிடைத்ததாக கெடா மாநில தீயணைப்பு மற்றும் மீட்புப்படை தரப்பு தெரிவித்தது.
இந்தத் தீ விபத்தில் மூன்று 'ஏ' வகை தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டன.
இவற்றில் முறையே 50 சதவீதமும் 90 சதவீதமும் சேதம் ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
பினாங்கில் உள்ள அருகிலுள்ள தீயணைப்பு நிலையத்தின் உதவியுடன், நான்கு நீரோட்டங்களைப் பயன்படுத்தி தீயணைப்புப் பணிகள் இன்னும் நடைபெற்று வருகின்றன.
தீ விபத்து காரணமாக யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 28, 2026, 12:28 pm
நம்பிக்கை கூட்டணி நிர்வாகச் செயல்திறனுக்கு முன்னுரிமை அளிக்கிறது; பதவிகளுக்கு அல்ல: ஸ்டீவன் சிம்
July 28, 2026, 12:26 pm
31,000 ஆறாம் படிவ மாணவர்கள் பொதுப் பள்ளி உதவித் தொகையைப் பெறுவார்கள்: பிரதமர்
July 28, 2026, 11:14 am
