செய்திகள் மலேசியா
போர்ட்டிக்சன் ஏஐ துறைமுகத் திட்டத்தில் நிலம் கையகப்படுத்துதல் நடவடிக்கைகள் இல்லை: அமினுடின்
லிங்கி:
போர்ட்டிக்சன் ஏஐ துறைமுகத் திட்டத்தில் நிலம் கையகப்படுத்துதல் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை.
நெகிரி செம்பிலான் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஹரூன் இதனை கூறினார்.
போர்ட் டிக்சனில் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான ஸ்மார்ட் போர்ட் திட்டத்தின் செயலாக்கம், வேறு எந்த நிலத்தையும் கையகப்படுத்தவில்லை.
மாறாக டான்கோ ஹோல்டிங்ஸ் பெர்ஹாட், அதன் துணை நிறுவனமான மிட்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸிற்கு சொந்தமான நிலத்தில் மேற்கொள்ளப்படும்.
கிராமப் பகுதிகள், வன இருப்புக்கள், பழங்குடி நிலங்கள், தொழில்துறை பகுதிகள், விவசாய மற்றும் குடியிருப்பு மனைகள் உட்பட சுமார் 566 ஹெக்டேர் (1,400 ஏக்கர்) பரப்பளவைக் கொண்ட நிலத்தை இத்திட்டத்தின் செயலாக்கத்திற்காகக் கையகப்படுத்த வேண்டியிருக்கும் என்ற கூறப்படும் குற்றச்சாட்டு உண்மையல்ல.
இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக நாங்கள் ஒரு கிராமத்தைக் கூட தியாகம் செய்ய மாட்டோம்.
கோல பிலா, ஜெலுபு, ரெம்பாவ், தம்பின் ஆகிய இடங்களில் மட்டுமே பழங்குடி நிலங்கள் உள்ள போர்ட்டிக்சனில், எந்த நிலமும் கையகப்படுத்தப்படாது.
குறிப்பாக எந்த வனப் பகுதிகளும் பாதிக்கப்படாது.
ஆகவே தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 28, 2026, 12:39 pm
கூலிமில் மூன்று தொழிற்சாலைகளில் தீ விபத்து: விசாரணை தொடர்வதாக கெடா தீயணைப்பு துறை தகவல்
July 28, 2026, 12:28 pm
நம்பிக்கை கூட்டணி நிர்வாகச் செயல்திறனுக்கு முன்னுரிமை அளிக்கிறது; பதவிகளுக்கு அல்ல: ஸ்டீவன் சிம்
July 28, 2026, 12:26 pm
