செய்திகள் மலேசியா
நம்பிக்கை கூட்டணி நிர்வாகச் செயல்திறனுக்கு முன்னுரிமை அளிக்கிறது; பதவிகளுக்கு அல்ல: ஸ்டீவன் சிம்
சிரம்பான்:
நம்பிக்கை கூட்டணி நிர்வாகச் செயல்திறனுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கிறது. பதவிகளுக்கு அல்ல.
ஜசெக துணைப் பொதுச் செயலாளரும் தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சருமான ஸ்டீவன் சிம் இதனை கூறினார்.
2018 முதல் நெகிரி செம்பிலானில் நம்பிக்கை கூட்டணி நிர்வாகம் சிறப்பான ஆட்சித் திறனை வெளிப்படுத்தி வரகூர்.
நேற்று இரவு திமியாங்கில் நடைபெற்ற பக்காத்தான் ஹராப்பான் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய அவர்,
நம்பிக்கை கூட்டணி ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் நெகிரி மாநிலத்தின் நிதி நிலை தொடர்ந்து வலுப்பெற்று வருவதாகவும், மாநிலத்தின் உபரி வருவாய் ஆண்டுதோறும் உயர்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.
2025ஆம் ஆண்டில் நெகிரி செம்பிலான் மாநிலத்தின் உபரி வருவாய் 203 மில்லியன் ரிங்கிட்டை தாண்டியுள்ளது.
இது 2018ஆம் ஆண்டில் இருந்த 140,000 ரிங்கிட்டுடன் ஒப்பிடுகையில் 1,449 மடங்கு அதிகரிப்பாகும்.
அதேபோல், 2025ஆம் ஆண்டில் நெகிரி செம்பிலான் 19 பில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான முதலீடுகளை ஈர்த்துள்ளது.
2018ஆம் ஆண்டில் அது 2.9 பில்லியன் ரிங்கிட் மட்டுமே இருந்தது. இது சுமார் 6.6 மடங்கு உயர்வாகும்.
அதே காலகட்டத்தில், மாநில அரசின் கையிருப்பு நிதி 688 மில்லியன் ரிங்கிட்டில் இருந்து 1 பில்லியன் ரிங்கிட் அதாவது 45.4 சதவீதம் உயர்ந்துள்ளது.
இந்த முதலீட்டு மதிப்பும், கையிருப்பு நிதியும் நெகிரி செம்பிலான் வரலாற்றிலேயே மிக உயர்ந்த அளவாகும்.
இவை வெறும் தேர்தல் வாக்குறுதிகள் அல்ல; பதிவுகளும் புள்ளிவிவரங்களும் மூலம் நிரூபிக்கக்கூடிய சாதனைகள் என்றார்.
இதற்கு மாறாக, ஜொகூர் மாநிலத் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், தேசிய முன்னணி மக்கள் நலனையும் மாநில வளர்ச்சியையும் உடனடியாக முன்னெடுப்பதற்குப் பதிலாக அரசியல் பதவிகளை அதிகரிப்பதில் ஈடுபட்டதாக ஸ்டீவன் சிம் குற்றம் சாட்டினார்.
புதிய மாநில அரசு உடனடியாக பணியில் இறங்கும் என்ற நம்பிக்கையுடன் மக்கள் வாக்களித்தனர்.
ஆனால், அவர்கள் மேற்கொண்ட முதல் நடவடிக்கைகளில் ஒன்றாக, அரசியல் நலன்களுக்காக 10 துணை ஆட்சிக்குழு உறுப்பினர் பதவிகளை உருவாக்கியது.
நம்பிக்கை கூட்டணி மக்களின் நலனை மேம்படுத்த பாடுபடும்போது, அவர்கள் மக்களின் வரிப்பணியில் கூடுதல் சுமையை ஏற்படுத்தும் வகையில் மேலும் 10 அரசியல் பதவிகளை உருவாக்கியுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.
நம்பிக்கை கூட்டணி நிகரான நிர்வாகச் சாதனைகளை எதிரணியால் முன்வைக்க முடியாததால், அவர்கள் இனவாத உணர்வுகளைத் தூண்டி, டிஏபியைத் தாக்குவதன் மூலம் ஆதரவைப் பெற முயற்சிப்பதாகவும் அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 28, 2026, 12:39 pm
கூலிமில் மூன்று தொழிற்சாலைகளில் தீ விபத்து: விசாரணை தொடர்வதாக கெடா தீயணைப்பு துறை தகவல்
July 28, 2026, 12:26 pm
31,000 ஆறாம் படிவ மாணவர்கள் பொதுப் பள்ளி உதவித் தொகையைப் பெறுவார்கள்: பிரதமர்
July 28, 2026, 11:14 am
