செய்திகள் மலேசியா
31,000 ஆறாம் படிவ மாணவர்கள் பொதுப் பள்ளி உதவித் தொகையைப் பெறுவார்கள்: பிரதமர்
புத்ராஜெயா:
கிட்டத்தட்ட 31,000 ஆறாம் படிவ மாணவர்கள் பொதுப் பள்ளி உதவித் தொகையைப் பெறுவார்கள்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை அறிவித்தார்.
இந்த ஆண்டு 4.69 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீட்டுடன் அரசாங்கம் இத்திட்டத்தை விரிவுபடுத்தி உள்ளது.
இதன் மூலம் மிகவும் ஏழ்மையான குடும்பங்களைச் சேர்ந்த 31,000க்கும் மேற்பட்ட ஆறாம் படிவ மாணவர்கள் பொதுப் பள்ளி உதவித் தொகையைப் பெற்றுள்ளனர்.
பள்ளி உதவித்தொகையைப் பெறும் வாய்ப்பில் ஆறாம் படிவ மாணவர்கள் இனிமேலும் விடுபட்டுப் போகாமல் இருப்பதை உறுதி செய்வதே இந்த முயற்சியின் நோக்கம்.
நாங்கள் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் படிவம் வரையிலான மாணவர்களுக்கு 150 ரிங்கிட் உதவித் தொகையை வழங்குகிறோம். ஆறாம் படிவம் இதில் அடங்காது.
எனவே, ஆறாம் படிவ மாணவர்களுக்கும் அதே உதவியை வழங்குவோம். ஆக அம்மாணவர்களும் பயன் பெறுவார்கள் என்று அவர் கூறினார்.
இன்று கல்வியமைச்சக ஊழியர்களுடனான கூட்டத்தில் தனது செய்தியை வழங்கியபோது அவர் இவ்வாறு கூறினார்.
கல்வி அமைச்சர் பட்லினா சிடேக், அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் டான் ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பக்கர் ஆகியோரும் உடனிருந்தனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 28, 2026, 12:39 pm
கூலிமில் மூன்று தொழிற்சாலைகளில் தீ விபத்து: விசாரணை தொடர்வதாக கெடா தீயணைப்பு துறை தகவல்
July 28, 2026, 12:28 pm
நம்பிக்கை கூட்டணி நிர்வாகச் செயல்திறனுக்கு முன்னுரிமை அளிக்கிறது; பதவிகளுக்கு அல்ல: ஸ்டீவன் சிம்
July 28, 2026, 11:14 am
