செய்திகள் மலேசியா
ஐ.நா. ஆணையத்தின் முன் கூடியிருந்த நூற்றுக்கணக்கான ரோஹிங்கியர்கள் கோலாலம்பூர் போலிஸ் தலைமையகத்திற்கு மாற்றப்பட்டனர்
கோலாலம்பூர்:
ஐநா ஆணையத்தின் முன் கூடியிருந்த நூற்றுக்கணக்கான ரோஹிங்கியர்கள் கோலாலம்பூர் போலிஸ் தலைமையகத்திற்கு மாற்றப்பட்டனர்.
கோலாலம்பூர் போலிஸ் படைத் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சஸ் இதனை கூறினார்.
இங்குள்ள ஜாலான் புக்கிட் பெட்டாலிங்கில் உள்ள ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர் ஆணையத்தின் (UNHCR) அலுவலகத்திற்கு முன்பாக நூற்றுக்கணக்கான ரோஹிங்கியா அகதிகள் முகாமிட்டிருந்தனர்.
அவர்கள் அனைவரும் இன்று ஆவண சரிபார்ப்பு, அடையாள சரிபார்ப்புக்காக கோலாலம்பூர் போலிஸ் படைப் பிரிவின் தலைமையகத்திற்கு மாற்றப்பட்டனர்.
இதில் சம்பந்தப்பட்ட அனைத்து வெளிநாட்டினரின் இடமாற்றமும் மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.
முன்னதாக ஆரம்பத்தில் வழங்கப்பட்ட இரண்டு காவல் துறை வாகனங்கள் போதுமானதாக இல்லாததால், பெரும்பாலான அகதிகள் தங்களது பயணப் பைகள், தனிப்பட்ட உடைமைகளையும் சுமந்து வந்த நிலையில் நான்கு போலிஸ் வாகனங்களைப் பயன்படுத்தி வெளியேற்றும் பணி தொடங்கியது தெரியவந்தது.
அதிகாரிகளால் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு முன்பு, அனைத்து வெளிநாட்டினருக்கும் அடையாளச் சரிபார்ப்பு செய்யப்படும் என்று அறியப்படுகிறது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 28, 2026, 12:39 pm
கூலிமில் மூன்று தொழிற்சாலைகளில் தீ விபத்து: விசாரணை தொடர்வதாக கெடா தீயணைப்பு துறை தகவல்
July 28, 2026, 12:28 pm
நம்பிக்கை கூட்டணி நிர்வாகச் செயல்திறனுக்கு முன்னுரிமை அளிக்கிறது; பதவிகளுக்கு அல்ல: ஸ்டீவன் சிம்
July 28, 2026, 12:26 pm
31,000 ஆறாம் படிவ மாணவர்கள் பொதுப் பள்ளி உதவித் தொகையைப் பெறுவார்கள்: பிரதமர்
July 28, 2026, 11:14 am
