செய்திகள் மலேசியா
மாராவின் திவேட் கல்வி திட்டம் கிட்டத்தட்ட 100 சதவீத வேலை வாய்ப்பை எட்டியுள்ளது: ஜாஹித்
புத்ராஜெயா:
மாராவின் திவேட் கல்வி திட்டம் கிட்டத்தட்ட 100 சதவீத வேலை வாய்ப்பை எட்டியுள்ளது.
துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி இதனை தெரிவித்தார்.
மாரா கீழ் மொத்தம் 270 தொழில்நுட்ப, தொழிற்கல்வி, பயிற்சி மையங்கள் உள்ளன.
இதன் மூலம் பட்டதாரிகளின் வேலை வாய்ப்பு விகிதத்தில் சுமார் 99.5 சதவீதத்தைப் பதிவு செய்துள்ளன
தற்போது திவேட் 2.0 கட்டத்திற்குள் நுழையும் நாட்டின் திவேட் செயல்திட்டத்தை வெற்றிபெறச் செய்வதில் மாரா நிறுவனங்கள் முன்னணியில் உள்ளன என்பதை இந்தப் பெருமைக்குரிய சாதனை நிரூபிக்கிறது.
புதிய பாடத்திட்டங்களை வழங்குவதோடு மட்டுமல்லாமல், குறிப்பிட்ட தொழிற்கல்வி நிறுவனங்களுக்கு உபகரணங்கள், கருவிகள் மற்றும் இயந்திரங்களை வழங்குவதன் மூலமும், நாடு தழுவிய தொழிற்கல்விக்கு ஆதரவளிப்பதில் தனியார் துறை முன்னணியில் இருப்பதையும் நான் மிகவும் பாராட்டுகிறேன்.
நான் முன்பு குறிப்பிட்ட பல்வேறு பங்களிப்புகளுடன் மட்டுமல்லாமல், அவர்கள் தொழிற்கல்வி 2.0-ஐ வரவேற்கிறார்கள்.
மேலும், அனைத்து தொழிற்கல்வி மாணவர்களும் இந்தத் துறையிலேயே பணியமர்த்தப்படுவார்கள், 100 சதவீதம் இந்தத் துறையிலேயே உள்வாங்கப்படுவார்கள்.
அதே வேளையில் தேசிய தொழிற்கல்வி மன்றம், மலேசியாவில் உள்ள பெரும்பாலான தொழிற்கல்வி நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளனர் என்று தேசிய திவேட் மன்றத்தின் தலைவரான ஜாஹித் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 12, 2026, 5:37 pm
ஜொகூர் மாநில மந்திரி புசாராக டத்தோ ஓன் ஹபிஸ் காஸி பதவியேற்றார்
July 12, 2026, 2:25 pm
ங்கா கோர் மிங் தனது ராஜினாமா வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்: கைரி
July 12, 2026, 2:24 pm
நஜிப் விடுதலையானால் தான் நான் ராஜினாமா செய்வேன்; தேசிய முன்னணியின் வெற்றியால் அல்ல: ங்கா
July 12, 2026, 1:53 pm
ஜாஹித் ஹமிடி, ஓன் ஹபிஸ் ஆகியோர் சுல்தான் இப்ராஹிமை சந்தித்தனர்
July 12, 2026, 12:12 pm
ஜோகூர் தேர்தல்: 55 வேட்பாளர்கள் வைப்புத்தொகையை இழந்தனர்
July 12, 2026, 10:41 am
