நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நெகிரி செம்பிலானில் நாளை முன்கூட்டியே வாக்களிப்பு: 22,000க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் பணியாளர்கள், அவர்களது துணைவியர்கள் வாக்களிக்கவுள்ளனர்

சிரம்பான் - 

16ஆவது நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தலில் 22,000க்கும் மேற்பட்ட பாதுகாப்பு பணியாளர்கள், அவர்களது துணைவியர்கள் நாளை தங்களது ஜனநாயக கடமையை மேற்கொள்ளவுள்ளனர் 

அதில் 16,884 பேர் இராணுவத்தினர் என்றும் 5,445 பேர் போலிஸ் அதிகாரிகள் குறிப்பிடப்பட்டுள்ளது. 

நெகிரி செம்பிலான் மாநில முழுவதும் 38 முன்கூட்டியே வாக்களிக்கும் மையங்கள் திறக்கப்படவுள்ளன. 

முன்கூட்டியே வாக்களிப்பு நாளை ஜூலை 28ஆம் தேதி நடைபெறவுள்ளது. 

16ஆவது நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி நடக்கவுள்ளது. 

36 சட்டமன்ற இடங்களுக்கும் அரசியல் கட்சிகள் தேர்தல் களம் கண்டுள்ளனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset