நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாட்டிலேயே சிறந்த, நவீன தமிழ்ப்பள்ளியை நெகிரி செம்பிலானில் கட்டியவன் நான்; பொய்களால் மக்கள் தொடர்ந்து ஏமாறக்கூடாது: முஹம்மத் ஹசான்

ரந்தாவ்:

நாட்டிலேயே  சிறந்த, நவீன தமிழ்ப்பள்ளியை நெகிரி செம்பிலானில் கட்டியவன் நான்.

இதை யாராலும் மறுக்க முடியாது என்று ரந்தாவ் சட்டமன்றத் தொகுதி தேசிய முன்னணி வேட்பாளர் டத்தோஸ்ரீ முஹம்மத் ஹசான் இதனை கூறினார்.

நெகிரி செம்பிலான் தேசிய முன்னணி ஆட்சியில் இருந்த போது மாநிலத்தில் பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டது.

குறிப்பாக 2045 மாநில உருமாற்ற மேம்பாட்டுத் திட்டத்தை நான் உருவாக்கினேன்.

ஆனால் கடந்த இரு தவனைகளாக ஆட்சியில் இருந்தவர்கள் இத்திட்டங்களை தொடரவில்லை.

இது மாநிலத்திற்கும் இங்குள்ள மக்களுக்கும் தான் மிகப் பெரிய பாதிப்பாகும்.

அதே வேளையில் இம்மாநிலத்தில் வாழும் இந்தியர்களின் பிரச்சினைகள் நான் மந்திரி புசாராக இருந்த போது தீர்த்துள்ளேன்.

இந்தியர்கள் எதிர்நோக்கிய நிலப் பிரச்சினை உட்பட ஆலயம், தமிழ்ப்பள்ளி பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளது.

குறிப்பாக நாட்டிலேயே  சிறந்த, நவீன தமிழ்ப்பள்ளியை நெகிரி செம்பிலானில் கட்டியவன் நான். இதை யாராலும் மறுக்க முடியாது.
ஆக வரும் தேர்தலில் நெகிரி செம்பிலான் வாக்காளர்கள் குறிப்பாக இந்தியர்கள் தேசிய முன்னணிக்கு ஆதரவு தர வேண்டும்.

இது மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நல்வாழ்வுக்கும் வித்திடும்.

மேலும் மக்கள் பொய்களை நம்பி தொடர்ந்து ஏமாறக் கூடாது.

ரந்தாவ் தொகுதி இந்திய மக்களுடன் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய டத்தோஸ்ரீ முஹம்மத் ஹசான் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்






தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset