நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பூமிபுத்ராக்கள், குறிப்பாக மலாய் மக்களின் நலன்களை என் அரசு புறக்கணிக்கிறதா?: பிரதமர் அன்வார் மறுப்பு

கோலாலம்பூர்: 

பூமிபுத்ராக்கள், குறிப்பாக மலாய் மக்களின் நலன்கள் புறக்கணிக்கப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மறுத்துள்ளார். 

தனது அரசாங்கத்தின் அர்ப்பணிப்புக்குச் சான்றாக, கோலாலம்பூரில் புதிய மலாய் ஒதுக்கீட்டு நிலம் உருவாக்கப்பட்டதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

2022-ல் பதவியேற்ற பிறகு, ஒழுங்குமுறை மீறல்கள் காரணமாக, முன்னர் மலாய் அல்லாத நிறுவனங்களின் வசம் இருந்த 480 ஏக்கர் பண்டார் மலேசியா பகுதியை அவரது நிர்வாகம் மீட்டெடுத்தது என்று அவர் கூறினார்.

இந்த நிலம், பெட்ரோனாஸ், கசானா நேஷனல் போன்ற மலாய் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டதுடன், அதில் 50 ஏக்கர் மலாய் ஒதுக்கீட்டு நிலமாக ஒதுக்கப்பட்டது. 

இந்த முன்மொழிவுக்கு அமைச்சரவையிடமிருந்து எந்த எதிர்ப்பும் வரவில்லை, இது இந்த முயற்சிக்கு வலுவான ஆதரவு இருப்பதைக் குறிக்கிறது என்று அவர் கூறினார். 

- பார்த்தின் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset