நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஃபார்முலா 1- போட்டிக்காக பஹ்ரைன் நாட்டு பட்டத்து இளவரசரும் பிரதமருமான சல்மான் பின் ஹமத் அல் கலீஃபாவுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் அன்வார் 

புத்ரா ஜெயா:

பஹ்ரைன் நாட்டு பட்டத்து இளவரசரும் பிரதமருமான இளவரசர் சல்மான் பின் ஹமத் அல் கலீஃபா அவர்களுடனும், ஃபார்முலா 1-இன் தலைவரும் தலைமைச் செயல் அதிகாரியுமான ஸ்டெஃபானோ டொமெனிகாலி அவர்களுடனும் உரையாடும் வாய்ப்பு தமக்கு கிடைத்ததாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

மலேசியாவின் மீது நம்பிக்கை வைத்துள்ள மாண்புமிகு இளவரசர், பஹ்ரைன் அரசாங்கம், மக்களுக்கு எனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த ஆண்டு சிப்பாங் சர்வதேச பந்தயத் திடலில் ஃபார்முலா 1 கல்ஃப் ஏர் பஹ்ரைன் கிராண்ட் பிரிக்ஸ் பந்தயத்தை நடத்துவதில் பஹ்ரைன் நாடும், ஃபார்முலா 1, FIA-க்கு ஆதரவளிப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.

இந்த ஒத்துழைப்பு ஒரு உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு நிகழ்வை நடத்துவதை விட மேலானது. இது மலேசியாவிற்கும் பஹ்ரைன் இராச்சியத்திற்கும் இடையிலான நீடித்த நட்பு, பரஸ்பர நம்பிக்கை மற்றும் நெருங்கிய கூட்டாண்மையைப் பிரதிபலிப்பதோடு, முக்கிய சர்வதேச நிகழ்வுகளை நடத்துவதற்கான மலேசியாவின் தயார்நிலையையும் திறனையும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

ஃபார்முலா 1, FIA, அணிகள், உலகெங்கிலும் உள்ள ரசிகர்களை மீண்டும் செபாங்கிற்கு வரவேற்க மலேசியா தயாராக உள்ளது. இந்தச் சிறப்பு நிகழ்வின் மூலம் எங்களது உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு, செயல்பாட்டுச் சிறப்பு மற்றும் அன்பான விருந்தோம்பலை வெளிக்காட்டுவதோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தவும் நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் என்று பிரதமர் தனது முகநூல் பதிவில் கூறியுள்ளார். 

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset