செய்திகள் மலேசியா
மலேசிய அரசக் காவல் படையின் சார்பில் டான் ஸ்ரீ அயோப் கானுக்கு மாபெரும் பிரியாவிடை விருந்து
பெட்டாலிங் ஜெயா:
நாட்டின் பாதுகாப்பைப் பேணுவதிலும், போலிஸ் படையை முழு அர்ப்பணிப்புடன் வழிநடத்துவதிலும் தனது நேர்மை, கொள்கைகள், தைரியத்திற்காக அறியப்பட்ட டான் ஸ்ரீ அயோப் கானின் 35 ஆண்டுகால சேவைக்கான பாராட்டைக் குறிக்கும் விதமாக நேற்று இரவு சன்வே தங்குவிடுதியில் இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இந்நிகழ்ச்சியில் பேசிய ஐ.ஜி. டான் ஸ்ரீ டத்தோ ஸ்ரீ முஹம்மது காலித், "சமூகம் நமது தோள்களில் எத்தனை நட்சத்திரங்கள் உள்ளன என்பதை மதிப்பிடுவதில்லை. நாம் எவ்வளவு நேர்மையாக இருந்திருக்கிறோம் என்பதையே அவர்கள் மதிப்பிடுகிறார்கள்," என்றார்.
"இந்நிகழ்ச்சியில், பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அவற்றில், டான் ஸ்ரீ அயோப் கானின் பணிப் பயணம், கடந்த 35 ஆண்டுகளில் போலிஸ் படைக்கு அவர் ஆற்றிய பங்களிப்புகளை எடுத்துரைக்கும் ஒரு சிறப்பு காணொலிக் காட்சி அங்கு கூடியிருந்தவர்களுக்குக் காண்பிக்கப்பட்டது. அத்துடன், அவரது சேவை, தியாகம், அர்ப்பணிப்புக்கு மரியாதை செலுத்தும் விதமாகப் பாராட்டுப் பரிசுகளும் வழங்கப்பட்டன."
இந்நிகழ்ச்சியில், காவல்துறை துணை இன்ஸ்பெக்டர் ஜெனரலும் சிறப்புப் பிரிவின் இயக்குநருமான டத்தோ ஸ்ரீ இப்ராஹிம் டாரஸ், அவரது மனைவி டத்தின் ஸ்ரீ ஸனிலதுல் கமரியா ஸகாரியா, மலேசிய அரச காவல்துறையின் இயக்குநர்கள், துணை இயக்குநர்கள், சபா, சரவாக் காவல்துறை ஆணையர்கள், மாநில காவல்துறையின் தலைவர்கள், ஓய்வுபெற்ற மலேசிய காவல்துறை அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 26, 2026, 7:03 pm
நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே: டத்தோ ஸ்ரீ சரவணன்
July 26, 2026, 2:40 pm
