செய்திகள் மலேசியா
மலேசியாவின் எண்ணெய் விநியோகம் தொடர்ந்து நிலைநிறுத்தம்: அமீர் ஹம்சா உறுதி
கெலானா ஜெயா:
மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றம் உலகளாவிய எரிசக்தி விநியோகச் சங்கிலியைப் பாதித்திருந்தாலும், மலேசியாவில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படவில்லை என நிதி அமைச்சர் II டத்தோஸ்ரீ அமீர் ஹம்சா அசிசான் உறுதியளித்துள்ளார்.
மக்களும் வணிகத் துறையும் எந்தவித சிரமமும் இன்றி வழக்கம்போல் எரிபொருளைப் பெற்றுவருவதாகக் குறிப்பிட்ட அவர், நாட்டின் எரிபொருள் கையிருப்பு போதுமானதாகவும் நிலையானதாகவும் இருப்பதை அரசு வெற்றிகரமாக உறுதி செய்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தாழ்வுகளைச் சந்தித்தாலும், ரோன்95 பெட்ரோலின் மானிய விலை லிட்டருக்கு 1.99 ரிங்கிட்டாகத் தொடர்ந்து நிலைநிறுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் வலியுறுத்தினார்.
அமீர் ஹம்சா கூறுகையில், ஒரே ஒரு நாட்டையோ சந்தையையோ நம்பாமல், பல்வேறு ஆதாரங்களிலிருந்து எரிபொருள் விநியோகத்தைப் பெறும் உத்தியை அரசு வலுப்படுத்தி வருவதாக தெரிவித்தார்.
இதன் மூலம் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய மோதல்கள், பேரிடர்கள் அல்லது புவிசார் அரசியல் நெருக்கடிகளால் விநியோகத் தடங்கல் ஏற்பட்டாலும் நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றார்.
அதேவேளை, மத்திய கிழக்குப் பதற்றம் சில பொருட்களின் உற்பத்திச் செலவு, விலைகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதை ஒப்புக்கொண்ட அவர், மக்கள், தொழில்துறையின் நலனைப் பாதுகாக்க அரசாங்கம் நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என உறுதியளித்தார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
July 27, 2026, 8:14 pm
அரச நிறுவனங்களை மதிப்பதுடன் 3ஆர் பிரச்சினைகளைத் தொடுவதைத் தவிர்க்க வேண்டும்: ஜாஹித்
July 27, 2026, 8:12 pm
முட்டைகள் வாங்கியபோது முகமூடி அணிந்த சந்தேக நபரால் சுடப்பட்டதில் ஆடவர் காயம்
July 27, 2026, 8:10 pm
ஒற்றுமையும் வேல் சக்தியும் இந்திய மாணவர்களின் கல்வி வெற்றிக்கு வழிகாட்டும்: சுரேன் கந்தா
July 27, 2026, 8:08 pm
