செய்திகள் விளையாட்டு
உலகக் கோப்பையை வென்றாலும் அசல் கோப்பை வீட்டுக்கு வராது: அதிர்ச்சியூட்டும் ஃபிஃபா ரகசியம்
லண்டன்:
உலகக் கோப்பையை வென்ற அணி, பரிசளிப்பு மேடையில் உயர்த்திப் பிடிக்கும் அந்த பிரபலமான ஃபிஃபா உலகக் கோப்பையை நிரந்தரமாக எடுத்துச் செல்கிறது என பலரும் நம்புகின்றனர். ஆனால் உண்மை அதிர்ச்சியளிக்கிறது.
உலகக் கோப்பை சாம்பியனான நாடு, அசல் கோப்பையை அல்ல; தங்க முலாம் பூசப்பட்ட அதிகாரப்பூர்வ பிரதியையே நினைவுச் சின்னமாகப் பெறுகிறது. வெற்றிக் கொண்டாட்டங்கள், பரிசளிப்பு நிகழ்வுகளுக்குப் பிறகு, அசல் கோப்பை மீண்டும் ஃபிஃபாவின் பாதுகாப்பிற்கே திருப்பி ஒப்படைக்கப்படுகிறது.
இந்த நடைமுறை, உலகக் கோப்பையின் வரலாற்றுப் பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் நோக்கில் அமல்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
1970-ஆம் ஆண்டு மூன்றாவது முறையாக உலகக் கோப்பையை வென்ற பிரேசில், அப்போதைய ‘ஜூல்ஸ் ரிமெட்’ கோப்பையை நிரந்தரமாக வைத்துக்கொள்ளும் உரிமையைப் பெற்றது. அதன்பின் ஃபிஃபா, 1974 முதல் தற்போது பயன்பாட்டில் உள்ள புதிய உலகக் கோப்பையை அறிமுகப்படுத்தியது.
இத்தாலிய சிற்பி சில்வியோ கசானிகா வடிவமைத்துள்ள தற்போதைய ஃபிப்பா உலகக் கோப்பை, 18 காரட் தங்கத்தால் உருவாக்கப்பட்ட உலகின் மிக மதிப்புமிக்க விளையாட்டு சின்னங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
உலக உருண்டையை உயர்த்திப் பிடிக்கும் இரண்டு மனித உருவங்களைக் கொண்ட இந்த கோப்பை, வெற்றியின் உச்சத்தைப் பிரதிபலிக்கிறது.
இதற்கிடையில், 2026 FIFA உலகக் கோப்பை அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ ஆகிய நாடுகள் இணைந்து நடத்தவுள்ளன. மேலும், வரலாற்றில் முதன்முறையாக 48 அணிகள் பங்கேற்கும் பிரம்மாண்ட உலகக் கோப்பை தொடராக அது அமையவுள்ளது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
July 27, 2026, 11:11 am
யூரோ 2028 போட்டிக்கு இங்கிலாந்து தகுதி பெற வேண்டும்
July 26, 2026, 1:50 pm
மெஸ்ஸி முடிவெடுத்துவிட்டார்: பரேடேஸ்
July 26, 2026, 1:17 pm
ஜெர்மனி அணியின் பயிற்சியாளராக ஜர்கன் குளோப் நியமனம்
July 25, 2026, 12:07 pm
புக்கிட் ஜாலில் விளையாட்டரங்கம் ஓடுதள பாதையின் முதல் பகுதி அகற்றும் பணி தொடக்கம்
July 24, 2026, 8:29 am
