நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மருந்தக முனைவர் பட்டத்திற்கான அங்கீகாரப் பிரச்சினைக்கு உயர் கல்வியமைச்சு, சுகாதார அமைச்சு உடனடியாகத் தீர்க்கக் காண வேண்டும்: பிரதமர் உத்தரவு

கோலாலம்பூர்:

மருந்தக முனைவர் பட்டத்திற்கான அங்கீகாரப் பிரச்சினைக்கு உயர் கல்வியமைச்சு, சுகாதார அமைச்சு உடனடியாகத் தீர்க்கக் காண வேண்டும்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

எகிப்தில் உள்ள மருந்தக முனைவர் திட்டத்திற்கான தகுதிகளை அங்கீகரிக்கும் பிரச்சினையில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

சம்பந்தப்பட்ட மாணவர்களின் நலனுக்காக உடனடியாக ஒரு தீர்வைக்  உயர்கல்வி அமைச்சும், சுகாதார அமைச்சும் காண வேண்டும்.

தற்போது, ​​தொடர்புடைய திட்டத்திற்கான கல்வி அங்கீகாரத்திற்கு மலேசியத் தகுதி முகமையிடம் (எம்கியூஏ) எந்தத் தடைகளும் இல்லை.

இருப்பினும், ஒரு மருந்தாளராகப் பதிவு செய்வதற்கான தொழில்முறை அங்கீகாரத்திற்கு மலேசிய மருந்தக வாரியத்தின் பரிசீலனையும் ஒப்புதலும் தேவை.

எனவே, மருந்தகத் துறைக்கு நிர்ணயிக்கப்பட்ட தொழில்முறைத் தரங்களைப் பாதிக்காமல், மக்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் ஒவ்வொரு முடிவிலும் மடானி கொள்கைகளுக்கு இணங்க, இரு அமைச்சுகளும்  இந்தப் பிரச்சினையை முழுமையாகத் தீர்க்க வேண்டும் என்று அவர்  கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset