செய்திகள் மலேசியா
டெய்லர்ஸ் பல்கலைக்கழகத்திலும் பாதுகாப்பு அச்சுறுத்தல்: வளாகம் அவசரமாக முடக்கம்
பெட்டாலிங் ஜெயா:
சுபாங் ஜெயாவில் அமைந்துள்ள டெய்லர்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் ஏற்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, மாணவர்களும் பணியாளர்களும் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
பல்கலைக்கழக நிர்வாகம் உடனடியாக அவசரகால நடவடிக்கைத் திட்டத்தை அமல்படுத்தியதுடன், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நெருக்கமாக இணைந்து செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.
"மாணவர்கள், ஊழியர்கள், வளாகத்திற்கு வருகை தருபவர்களின் பாதுகாப்பே எங்களின் மிக உயர்ந்த முன்னுரிமை," என்று பல்கலைக்கழக தரப்பு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
சம்பவத்தின் தன்மை குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகாத நிலையில், நிலைமையைக் கண்காணித்து வரும் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக, இதற்கு முந்தைய நாளில் சுபாங் ஜெயாவில் உள்ள மோனாஷ் பல்கலைக்கழக வளாகமும் குண்டு மிரட்டல் சந்தேகத்தால் பல மணி நேரம் மூடப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து டெய்லர்ஸ் பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட இந்த பாதுகாப்பு சம்பவம் மாணவர்கள், பெற்றோர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
June 5, 2026, 5:17 pm
லெபனானில் ஐ.நா. அமைதிப் படையினர் மீதான தாக்குதலுக்குக் கண்டனம் விதித்த மலேசியா
June 5, 2026, 4:38 pm
இன்ஸ்டாகிராமில் கடன் வாங்கி விபரீதம்: பல்கலைக்கழக மாணவருக்கு நேர்ந்த கொடுமை
June 5, 2026, 1:51 pm
பாஸ், அம்னோ இடையிலான சந்திப்பை ஹாடி அவாங் உறுதிப்படுத்தினார்
June 5, 2026, 1:48 pm
ஜொகூர் சட்டமன்றத் தேர்தலில் டான்ஸ்ரீ மொஹைதின் போட்டியிட மாட்டார்
June 5, 2026, 11:27 am
