நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நெகிரி செம்பிலானின் 12ஆவது யாங் டி-பெர்துவான் பெசாராக துங்கு நட்ஷாருடின் முடிசூட்டப்பட்டார்

மலாக்கா:

நெகிரி செம்பிலானின்  யாங் டி-பெர்டுவான் பெசாராக துங்கு நட்ஷாருடின் முடி சூட்டப்பட்டார்.


சிறிது நேரத்திற்கு முன்பு மலாக்காவில் உள்ள ஒரு ரிசார்ட்டில் நடைபெற்ற விழாவில் அவர் யாங் டி-பெர்துவான் பெசாராக முடிசூட்டப்பட்டார்.

நான்கு அரச குடும்பங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஜெலுபு அரசக் குடும்பத் தலைவர் மரோஃப் மாட் ரஷாத் ஒரு விழாவில் இதனை அறிவித்தார்.

நெகிரி செம்பிலான் அரசியலமைப்பு 1959 இன் பிரிவு 11 இன் படி நாங்கள் நான்கு அரச குடும்பங்கள் எங்களுக்கு அதிகாரம் அளித்து,

நெகிரி செம்பிலானின் துங்கு பங்லிமா பெசார், துங்கு நட்ஷாருடின் ஒய் துவாங்கு ஜாபர்தாங் நேகர் பெசாராக தேர்ந்தெடுத்து அறிவிக்கிறோம்.

இது உடனடியாக அமலுக்கு வருகிறது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset