நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நெகிரி செம்பிலான் இந்திய வர்த்தகர்கள் முத்ரா திட்டத்தின் வாயிலாக பயனடைய வேண்டும்: திருநாவுக்கரசு

சிரம்பான்:

நெகிரி செம்பிலானில் உள்ள இந்திய வர்த்தகர்கள் முத்ரா திட்டத்தின் வாயிலாக பயனடைய வேண்டும்.

இதுவே நெகிரி செம்பிலான் இந்திய வர்த்தக தொழிலியல் சங்கத்தின் இலக்கு என்று அதன் தலைவர் திருநாவுக்கரசு கூறினார்.

நெகிரி செம்பிலானில் உள்ள இந்திய வர்த்தகர்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு சங்கம் செயல்பட்டு வருகிறது.

கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் கிட்டத்தட்ட 5.2 மில்லியன் ரிங்கிட் தெக்குன் கடனுதவியை இங்கு வர்த்தகர்களுக்கு சங்கம் கொண்டு சேர்த்துள்ளது.

அதே வேளையில் கடந்தாண்டு மித்ராவின் கீழ் 750,000 ரிங்கிட் மதிப்புள்ள வர்த்தகத்திற்கு தேவையான உதவிப் பொருட்கள் பெற்றுத் தரப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் தான் தற்போது முத்ரா திட்டத்தை வர்த்தகர்களுக்கு கொண்டு சேர்க்கும் முயற்சிகளை சங்கம் தற்போது எடுத்துள்ளது.

முத்ரா என்பது இந்திய தொழில்முனைவோர் மூலதனம், பொருளாதார ஊக்குவிப்பு திட்டமாகும்.

தொழில்முனைவோர் மேம்பாடு கூட்டுறவு அமைச்சு இத்திட்டத்தின் கீழ் கிட்டத்தட்ட 220 மில்லியன் ரிங்கிட்டை  ஒதுக்கியுள்ளது

தெக்குன் நேஷனல் 120 மில்லியன் ரிங்கிட், பேங்க ரக்யாத் 15 மில்லியன் ரிங்கிட், எஸ்எம்இ பேங்க் 50 மில்லியன் ரிங்கிட், அமானா இக்தியார் 27 மில்லியன் ரிங்கிட், மலேசிய கூட்டுறவு ஆணையம் 11 மில்லியன் ரிங்கிட்  ஆகியவை இதில் அடங்கும்.

இத்திட்டத்தில் மொத்தம் 20 மில்லியன் ரிங்கிட்டை நெகிரி செம்பிலானில் உள்ள இந்திய வர்த்தகர்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே எங்களின் இலக்காகும்.

ஆக இந்திய வர்த்தகர்கள் முழுமையாக இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என திருநாவுக்கரசு கூறினார்.

- பார்த்திபன்நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset