செய்திகள் மலேசியா
இன்ஸ்டாகிராமில் கடன் வாங்கி விபரீதம்: பல்கலைக்கழக மாணவருக்கு நேர்ந்த கொடுமை
கோலாலம்பூர்:
வெறும் 1,000 ரிங்கிட் இணையத்தில் கடன் வாங்கிய பல்கலைக்கழக மாணவர் ஒருவர், இறுதியில் 16,800 ரிங்கிட் செலுத்துமாறு மிரட்டப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
19 வயதான மாணவர் யாப், இன்ஸ்டாகிராம் மூலம் 1,000 ரிங்கிட் கடனுக்கு விண்ணப்பித்திருந்தார். ஆனால் பல்வேறு “கட்டணக் கழிவுகள்” என்ற பெயரில், அவரது கைக்கு வந்தது வெறும் 700 ரிங்கிட் மட்டுமே. அதுவும் ஒரே தடவையில் அல்லாமல் தவணை முறையில் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அதிர்ச்சியின் உச்சமாக, சில வாரங்களில் கடனை முழுமையாகத் திருப்பிச் செலுத்திய பின்னரும், கடன் வழங்கிய தரப்பு 8,000 ரிங்கிட்‘தீர்வுக் கட்டணம்’ கோரியதாக அவர் தெரிவித்துள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்ததோடு காவல்துறையில் புகார் அளித்ததும், மிரட்டல்களின் தொடர் ஆரம்பமானதாக கூறப்படுகிறது.
“வணிக இழப்பீடு” என்ற பெயரில் 16,800 ரிங்கிட் கோரப்பட்டது. அதோடு, இரத்தக் கறைகள் சேர்க்கப்பட்ட போலி புகைப்படங்கள், “Scammer Alert” என்ற வாசகங்கள், வீட்டில் வண்ணம் தெளிப்பது, தீ வைப்பது போன்ற அச்சுறுத்தல்களும் குடும்பத்தினருக்கு அனுப்பப்பட்டதாக மாணவர் தெரிவித்துள்ளார்.
மேலும், வீட்டின் மீது தாக்குதல் நடத்தாமல் இருக்க 3,000 ரிங்கிட் கப்பம் கோரி ஒரு நபர் மிரட்டியதாகவும், பின்னர் பேச்சுவார்த்தைக்குப் பிறகு 12,000 ரிங்கிட் செலுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த எம்.சி.ஏ தலைவர்கள், இது சட்டவிரோத வட்டிக்கடன், மோசடி இரண்டின் கலவையாகும் எனக் குறிப்பிட்டுள்ளனர். குறிப்பாக மாணவர்கள், இளைஞர்கள், சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்தப்படும் பதிவு செய்யப்படாத இணைய கடன் திட்டங்களில் சிக்காமல் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
June 5, 2026, 6:30 pm
டெய்லர்ஸ் பல்கலைக்கழகத்திலும் பாதுகாப்பு அச்சுறுத்தல்: வளாகம் அவசரமாக முடக்கம்
June 5, 2026, 5:17 pm
லெபனானில் ஐ.நா. அமைதிப் படையினர் மீதான தாக்குதலுக்குக் கண்டனம் விதித்த மலேசியா
June 5, 2026, 1:51 pm
பாஸ், அம்னோ இடையிலான சந்திப்பை ஹாடி அவாங் உறுதிப்படுத்தினார்
June 5, 2026, 1:48 pm
ஜொகூர் சட்டமன்றத் தேர்தலில் டான்ஸ்ரீ மொஹைதின் போட்டியிட மாட்டார்
June 5, 2026, 11:27 am
