நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எல்ஆர்டி ரயிலில் கண்ணாடித் தடுப்பு உடைந்தது: ஐந்து பயணிகள் காயம்

கோலாலம்பூர்:

எல்ஆர்டி ரயிலில் கண்ணாடித் தடுப்பு உடைந்த சம்பவத்தில் ஐந்து பயணிகள் காயமடைந்தனர்.


ரேப்பிட் கேஎல் ஓர் அறிக்கையின் வாயிலாக இதனை தெரிவித்துள்ளது.

நேற்று வியாழக்கிழமை மாலை, டாங் வாங்கி நிலையம் அருகே நடந்த ஒரு சம்பவத்தில், கிளானா ஜெயா வழித்தடத்தில் சென்றுகொண்டிருந்த எல்ஆர்டி ரயில் ஒன்றின் உள்ளே இருந்த கண்ணாடித் தடுப்பு உடைந்தது.

கண்ணாடி உடைந்ததில் ஐந்து பயணிகள் காயமடைந்தனர்.

ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டுக்கொண்டிருந்தபோது, ​​மாலை சுமார் 6.07 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

ரயில் நகர்ந்து கொண்டிருந்தபோது அதன் தானியங்கி பாதுகாப்பு அமைப்பு செயல்படுத்தப்பட்டதால், செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு நடவடிக்கையாக ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது.

எதிர்பாராத சூழ்நிலைகளை உடனடியாகக் கையாள்வதை உறுதி செய்வதற்காக வடிவமைக்கப்பட்ட, தற்போதுள்ள ரயில் பாதுகாப்பு அம்சங்களின் ஒரு பகுதியாக இந்த அமைப்பு செயல்படுத்தப்படுகிறது.

ரயில் திடீரென நின்றதைத் தொடர்ந்து, நின்று கொண்டிருந்த பயணி ஒருவர் நிலை தடுமாறியதால், அவர் வைத்திருந்த தண்ணீர் பாட்டில் இருக்கையின் பக்கவாட்டில் இருந்த கண்ணாடித் தடுப்பில் மோதியதாக நம்பப்படுகிறது.

இந்த மோதலின் தாக்கத்தால் கண்ணாடித் தடுப்பு உடைந்து, அதன் சிதறல்கள் அருகிலிருந்த பல பயணிகள் மீது பட்டது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, ஐந்து பயணிகள் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

அவர்களில் இருவர் மேலதிக சிகிச்சைக்காக கோலாலம்பூர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

மற்ற பயணிகள் சம்பவ இடத்திலேயே சிகிச்சை பெற்றுக்கொண்டு தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர் என்று அந்த அறிக்கை கூறியது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset