நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

திட்டமிட்டப்படி ஜூன் 22ஆம் தேதி நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்கும்: மக்களவை சபாநாயகர் அலுவலகம்

கோலாலம்பூர்:

வரும் ஜூன் 22ஆம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டிருந்த 15ஆவது நாடாளுமன்றத்தின் ஐந்தாம் தவணையின் இரண்டாவது கூட்டம், நிர்ணயிக்கப்பட்ட கால அட்டவணைப்படி தொடரும்.

மக்களவை சபாநாயகர் டான்ஸ்ரீ ஜொஹரி அப்துலின் அலுவலகம் ஓர் அறிக்கையின் வாயிலாக இதனை தெரிவித்துள்ளது.

மக்களவை அமர்வு கால அட்டவணையில் எந்த மாற்றமும் இருக்காது.

நாடாளுமன்றத்தின் அதிகாரப்பூர்வ நாட்காட்டியில் காட்டப்பட்டுள்ள மக்களவை அமர்வு அட்டவணையில் இதுவரை எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை.

நாடாளுமன்ற இணையதளத்தின் நாட்காட்டியின்படி, 15ஆவது நாடாளுமன்றத்தின் ஐந்தாம் பதவிக்காலத்தின் இரண்டாவது கூட்டம், ஜூன் 22 முதல் ஜூலை 16 வரை 16 நாட்களுக்கு நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset