செய்திகள் மலேசியா
மோனாஷ் பல்கலைக்கழக வளாகம் வெடிகுண்டு மிரட்டலில் இருந்து பாதுகாப்பாக உள்ளது
சுபாங்ஜெயா:
வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து, சுபாங் ஜெயாவில் உள்ள மோனாஷ் பல்கலைக்கழக வளாகம் பாதுகாப்பாக இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
சுபாங் ஜெயா மாவட்ட போலிஸ் துறையினர் முழுமையான பாதுகாப்புச் சோதனைக்கு நடத்தினர்.
இதைத் தொடர்ந்து நிலைமை பாதுகாப்பாக இருப்பதாகவும், வளாகம் இன்று வழக்கம் போல் செயல்படலாம் என்றும் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
மோனாஷ் ஜொகூர்பாரு மருத்துவப் பள்ளி மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டிருக்கும் என்று அது ஒரு அறிக்கையில் கூறியுள்ளது.
முன்னதாக நேற்று இரவு, அவசர நிலை காரணமாக அனைத்து மாணவர்களையும் வளாகத்தை உடனடியாகக் காலி செய்யுமாறு மோனாஷ் பல்கலைக்கழக மாணவர் சங்கம் உத்தரவிட்டது.
அவசரக்கால மீட்புக் குழுக்களும் பல்கலைக்கழக நிர்வாகமும் நிலைமையைக் கையாளும் வரை, வளாகம் சுமார் ஐந்து மணி நேரம் மூடப்பட்டிருக்கும் என்று அந்த பல்கலைக்கழகம் கூறியது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 5, 2026, 6:30 pm
டெய்லர்ஸ் பல்கலைக்கழகத்திலும் பாதுகாப்பு அச்சுறுத்தல்: வளாகம் அவசரமாக முடக்கம்
June 5, 2026, 5:17 pm
லெபனானில் ஐ.நா. அமைதிப் படையினர் மீதான தாக்குதலுக்குக் கண்டனம் விதித்த மலேசியா
June 5, 2026, 4:38 pm
இன்ஸ்டாகிராமில் கடன் வாங்கி விபரீதம்: பல்கலைக்கழக மாணவருக்கு நேர்ந்த கொடுமை
June 5, 2026, 1:51 pm
பாஸ், அம்னோ இடையிலான சந்திப்பை ஹாடி அவாங் உறுதிப்படுத்தினார்
June 5, 2026, 1:48 pm
ஜொகூர் சட்டமன்றத் தேர்தலில் டான்ஸ்ரீ மொஹைதின் போட்டியிட மாட்டார்
June 5, 2026, 11:27 am
